இலவச கட்டாய கல்வி உரிமை கடைசி நேரத்தில் மறுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

இலவச கட்டாய கல்வி உரிமை கடைசி நேரத்தில் மறுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள்   மாவட்ட ஆட்சியரிடம் மனு!

ஆறிலிருந்து பதினான்கு வயது வரையிலான ஒவ்வொரு குழந்தையும் இலவச கட்டாயக் கல்வி பெறும் உரிமை பெற்றுள்ளனர். அரசியல் அமைப்புச் சட்ட 86ஆவது பிரிவில் சேர்க்கப்பட்ட சட்டப்பிரிவு 21ஏ சட்டத் திருத்தத்தின்படி, கல்வி உரிமை மசோதா இந்தச் சட்டப் பிரிவு சட்டத்தில்
அரசால் நடத்தப்படும் அரசுப் பள்ளிகள் அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச கல்வி வழங்கும். இந்தப் பள்ளிகள் அரசு நிர்வாகக் குழுக்களால், நிர்வகிக்கப்படும் தனியார் பள்ளிகள்  25% குழந்தைகளையாவது அவர்களுடைய பள்ளிகளில் கட்டணம் இல்லாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும் என இச்சட்டம் வலியுறுத்துகிறது.
ஆயினும் 

திருச்சி BHEL மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்ட
 மாணவ மாணவிகளில்  அரசின் இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 23 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 இதில் 5 குழந்தைகளுக்கு மட்டும் பள்ளியில் சேர்வதற்கான அனுமதி வழங்கி வழங்கி விட்டு, மீதமுள்ள 18 குழந்தைகளை சேர்க்க முடியாது என பள்ளி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இதுகுறித்து பெற்றோர்கள் கேட்டதற்கு ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் குழந்தைகளை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இவர்கள் அனைவரும் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பால் 
உள்ளவர்கள் என்பதால் அனுமதிக்கவில்லை என அரசு விதிமுறையை காரணம் காட்டி  மறுத்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தங்கள் குழந்தைகளுக்கும் கல்வி வழங்க வேண்டும் என கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர்.