குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தச்சங்குறிச்சி ஊராட்சியில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருச்சி புள்ளம்பாடி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். லால்குடி அருகே தச்சங்குறிச்சி ஊராட்சியில் 650க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக முறையாக குடிநீர் விநியோகம் வழங்காதால் அப்பகுதி மக்கள் இது குறித்து ஊராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை புள்ளம்பாடி திருச்சி சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காணக்கிளியநல்லூர் போலீசார் மற்றும் தச்சங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நிலத்தடி நீர்மட்டம் குறைந்த்தாலும், மின்மோட்டார் அடிக்கடி பழுது ஏற்படுவதால் சரிவர குடிநீர் வழங்க முடியவில்லை. விரைவில் குடிநீர் வழகப்படுமென உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் ர போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவியர், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.