திருச்சியில் தொடங்கிய புறா பந்தயம் - வானில் டைவ்

திருச்சியில் தொடங்கிய  புறா பந்தயம் - வானில் டைவ்

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் புறா பந்தயம் நடத்தப்படுவது வழக்கம். இன்று (07.06.2024) திருவானைக்காவல் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் முதலில் கர்ண புறாக்களுக்கான பந்தயம் துவங்கியது. 

இதில் 25 ஜோடி புறாக்கள் கலந்து கொண்டன. கர்ண புறா பந்தயத்தில் திருச்சியில் உறையூர், எடத்தெரு, மலைக்கோட்டை, காட்டூர், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் பகுதிகளிலிருந்தும் போட்டி நடந்தது. பந்தயத்தில் கர்ண புறாக்களுக்கான விதிமுறைகள் வானில் 3 நாட்கள் 5 மணி நேரம் தொடர்ந்து பறக்க வேண்டும். கர்ணம் அடிக்க வேண்டும். சரியான இடத்தில் வந்து புறாக்கள் அமர வேண்டும் என்ற விதிமுறைகளுக்குட்பட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.

மது போன்ற போதை வஸ்துகளை பயன்படுத்துவர்கள் போட்டியில் இருந்து விலக்கப்படுவார்கள். அடுத்த வாரம் சாதாரண புறாக்களுக்கான போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க நுழைவு கட்டமாக ரூ.2500 வசூலிக்கப்படுகிறது. முதல் பரிசாக 13 ஆயிரத்து 003 ரூபாய் வெற்றி பெறும் புறா உரிமையாளர்களுக்கு பரிசு தொகையாக வழங்கப்படுகிறது. இரண்டாம் பரிசாக 11,505 ரூபாயும், மூன்றாம் பரிசாக 9505 ரூபாய் கொடுக்கப்படுகிறது.

முன்னதாக பந்தயத்தில் பங்கேற்க வந்த புறாக்களுக்கு சீல் வைக்கப்பட்டு முறையான அனுமதியுடன் போட்டியில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இப்போட்டிகளில் ஆர்வமாக ஏராளமானோர் கலந்து கொண்டனர். இப்போட்டிக்கான ஏற்பாடுகளை தலைவர் பாபா பாலாஜி, செயலாளர் பெரியசாமி, பொருளாளர் ஜாக் சரவணன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision