எஸ் ஆர் எம் கல்வி குழுமம் வளாகத்தில் உழவும் நாமும் என்ற தலைப்பில் பொங்கல் விழா

எஸ் ஆர் எம் கல்வி குழுமம் வளாகத்தில் உழவும் நாமும் என்ற தலைப்பில் பொங்கல் விழா

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்துள்ள இருங்கலூர் ஊராட்சியில் உள்ள எஸ் ஆர் எம் கல்வி குழுமம் செயல்பட்டு வருகிறது. பொங்கல் விழாவை முன்னிட்டு உழவும் நாமும் என்ற தலைப்பில் பொங்கல் விழா நடைபெற்றது. உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களின் திருவிழாக்களில் முக்கியமானது பொங்கல் திருவிழாவாகும். பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் வீரத்தை பறை சாற்றும் இந்த விழாவை தமிழர்கள் தொன்று தொட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி எஸ்.ஆர்.எம். கல்வி குழுமம் சார்பில் திருச்சி எஸ் ஆர் எம் கல்வி நிறுவன வளாகத்தில் இன்று உழவும் நாமும் என்ற தலைப்பில்பொங்கல் திருவிழா வண்ணமயமாக நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்றவர் பலர் தமிழர்களுக்கே உரிய வேஷ்டி சட்டை மற்றும் சேலை ஆடைகளை உடுத்தி உற்சாகமாக, வண்ணமயமாக காட்சி அளித்தனர்.

பொங்கல் விழாவை யொட்டி எஸ்.ஆர்.எம்.நிறுவன நுழைவு பகுதியிலிருந்து தமிழர்களின் பாரம்பரிய கலைகளான தாரை தப்பட்டை, நாதஸ்வரம், பறை இசை முழங்க , கரகாட்டம், மயிலாட்டம், குயிலாட்டம், கோலாட்டம், சிலம்பம் உள்ளிட்ட வீர விளையாட்டுகளோடு மருத்துவம் , பொறியியல், கலை அறிவியல், நர்சிங் என பல்வேறு துறைகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர், சுமார் 350 அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுடன் இணைந்து பங்கேற்ற ஊர்வலம் தொடங்கியது.

திருச்சி மற்றும் ராமாபுரம் கல்லூரி வளாக தலைவர் டாக்டர் சிவகுமார் கலந்து கொண்ட சிறப்பித்தார் மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர்கள், மாணவ மாணவியர், ஆசிரியர் பெருமக்கள், அலுவலர்கள், ஊழியர்கள் என 6000 மேற்பட்டோர்  பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடந்து முடிவடைந்தது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision