திருச்சியில் ‌போலி மசாஜ் சென்டரில் விபச்சாரம் - 6 நபர்கள் கைது - 7 பெண்கள் மீட்பு!!

திருச்சியில் ‌போலி மசாஜ் சென்டரில் விபச்சாரம் - 6 நபர்கள் கைது - 7 பெண்கள் மீட்பு!!

Advertisement

திருச்சி மாநகரில் "ஸ்பா சென்டர்” என்ற பெயரில் போலி மசாஜ் சென்டர் நடத்தி பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்த குற்றவாளிகளை பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் போலியாக செயல்பட்டு வந்த 10 ஸ்பா சென்டர்களை சோதனை செய்து குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் இதுபோன்ற குற்றங்கள் நடவாமல் தடுக்க தொடர் கண்காணிப்பில் தனிப்படையினர் ஈடுபட்டுவந்த நிலையில், நேற்று தனிப்படையினருக்கு கிடைத்த தகவலின்பேரில் அமர்வு நீதிமன்ற காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜா காலனி பகுதியில் இயங்கிவந்த ரோஸ் பெட்டல் ஸ்பா, 2) பொன்னகர் பகுதியில் இயங்கிவந்த மேக்ஸ் ஸ்பா, 3) கே.கே.நகர் காவல் நிலைய எ்லைக்குட்பட்ட சுந்தர்நகர் பகுதியில் இயங்கிவந்த ரிலக்ஸ் ஸ்பா மற்றும் 4) தில்லை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 5-வது பிரதான சாலை பகுதியில் இயங்கிவந்த மேக்ஸ் ஆயூர்வேதிக் சென்டர் ஆகிய இடங்களில் தனிப்படையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisement

எப்பா மையம் என்ற பெயரில் கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து பெண்களை அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி வேலைக்கு அமர்த்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட 7 பெண்களை மீட்டனர். மற்றும் 3 ஆண்களும் மற்றும் 3 பெண்களும் பிடிபட்டனர்.

இது சம்மந்தமாக அமர்வு நீதிமன்றம், கே.கே.நகர், தில்லைநகர் காவல் நிலையங்களில் விபச்சார தடுப்பு பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பியும், பாதிக்கப்பட்ட 7 பெண்கள் மீட்கப்பட்டும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இவ்வழக்குகளில் 2 ஸ்பாக்களை நடத்திவந்த உரிமையாளரான முக்கிய குற்றவாளி தலைமறைவாக உள்ளார். அவரையும், போலி மசாஜ் சென்டர் நடத்திய மற்ற ஸ்பா உரிமையாளர்கள் மற்றும் ஸ்பா சென்டர் வைப்பதற்கு கட்டிடங்களை வாடகைக்கு கொடுத்து உதவிய அந்தந்த கட்டிடங்களின் உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தனிப்படையினரால் மேற்கண்ட அனைவரும் தேடப்பட்டு வருகிறார்கள் மேற்படி 4 ஸ்பா சென்டரில் இருந்த பாதிக்கப்பட்ட 7 பெண்களை மீட்ட தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார். 

திருச்சி மாநகரில் சட்டத்திற்கு புறம்பாக இதுபோல் போலியான ஸ்பா என்ற பெயரில் பெண்களை ஏமாற்றி விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது மீண்டும் கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்டவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் துறையினரால் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.