இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டம் திருச்சி ப. மாணிக்கம் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் க.இப்ராகிம் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பா. தினேஷ் நிகழ் கால அரசியல் நிலை குறித்து உரையாற்றினார். கூட்டத்தில் இளைஞர் பெருமன்றத்தின் மாநில செயலாளர் க.பாரதி கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.சிவா, ஏஐடியுசி மாவட்ட செயலாளர் க. சுரேஷ், வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்திருந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் யுஜிசியின் வரைவு அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டிற்கு நிதித் தர மறுக்கும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்தும் மற்றும் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தை நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர்கள் பிரகாஷ், சினேகா மற்றும் துணைச் செயலாளர்கள் வீரபாண்டியன், ராமசாமி மற்றும் மாநிலப் பொருளாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision