வடமாநில ஊழியரால் திருச்சி விமான நிலையத்தில் பார்க்கிங் செய்த காரை எடுக்க முடியாமல் தவிப்பு

வடமாநில ஊழியரால் திருச்சி விமான நிலையத்தில் பார்க்கிங் செய்த காரை எடுக்க முடியாமல் தவிப்பு

திருச்சி விமான நிலையத்தில் வட மாநில ஊழியரால் பார்க்கிங் செய்த காரை எடுக்க முடியாமல் தவியாய் தவித்தவர்தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய பன்னாட்டு விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் இயங்கி வருகிறது. சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை, உள்ளிட்ட 14 நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் திருச்சி சர்வதேச விமான நிலைய வளாகத்தில் கட்டண கார் பார்க்கிங் உள்ளது.விமானத்தில் திருச்சி வந்த தனது உறவினரை அழைத்து செல்ல வந்த ஒருவர் கட்டண கார் பார்க்கிங்கில் நான்கு மணி நேரம் காரை நிறுத்துவதற்கானபணத்தை செலுத்தியுள்ளார்.நிர்ணயித்த அளவைவிடகூடுதலாக கார் பார்க்கிங்செய்யப்பட்டதால், அதற்காககூடுதலாக ரூபாய் 500 அபராதம்செலுத்த வேண்டும் என கார் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்பவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அபராத தொகையைகார் உரிமையாளர் ஒப்புக்கொண்டபோதிலும், காரின்சாவியைஎடுத்துக்கொண்டுஉரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்காமல் கார் பார்க்கிங்கில்கட்டணம் வசூல் செய்பவர்அடாவடியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவரிடம் கேட்க முயன்றபோது தனக்கு தமிழோஆங்கிலமோ தெரியாது. ஹிந்தி மட்டுமே தெரியும் என கூலாக கூறியுள்ளார்.இதையடுத்து அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும். எங்கள் மொழியான தமிழை தெரிந்து கொள்ளாமல் உங்களை திருச்சி விமான நிலையத்தில் பணியமர்த்தியது யார் ? என்பது குறித்து கேள்வி எழுப்பியதோடு, அங்கு நடந்த விவாதத்தை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் கார் பார்க்கிங் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும். அங்கு தமிழ் பேச தெரிந்தவர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் பயணிகள் மற்றும் அவர்களை அழைத்து வரும் உறவினர்களின் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision