நகராட்சி வருவாய் ஆய்வாளர் கண்டித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை

நகராட்சி வருவாய் ஆய்வாளர்  கண்டித்து  பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை

துறையூர் நகராட்சி வருவாய் ஆய்வாளர் பாண்டி துறையை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் உட்பட பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை

திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளிலும் வசித்து வரும் பொதுமக்கள் கட்டும் சொத்து வரியை வரியை எந்தவித ஆய்வு நேரில் சென்று பார்வையிடாமல் பழைய சொத்து வரி ரசீதை வைத்து ஒரு வரைமுறை இல்லாமல் வருவாய் ஆய்வாளர் பாண்டிதுரை விருப்பத்திற்கு வரிகளை உயர்த்தியதாக குற்றம் சாட்டி துறையூர் நகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் மற்றும்

 நகர் மன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன் சுதாகர் ஜானகிராமன் மற்றும் திமுக வார்டு கவுன்சிலர்கள் பொதுமக்களுடன் நகராட்சிவருவாய் ஆய்வாளர் பாண்டிதுறையை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறி முற்றுகையிட்டனர்,

 போராட்டக்காரர்களிடம் நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷா பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர், போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision