ஸ்ரீரங்கம் கோவிலில் ரஜினிகாந்த் மகள் சுவாமி தரிசனம்

ஸ்ரீரங்கம் கோவிலில் ரஜினிகாந்த் மகள் சுவாமி தரிசனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவருடைய கணவர் விசாகனுடன் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனை தொடர்ந்து கருடாழ்வார் சன்னதி, மூலவர் பெரிய பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி உள்ளிட்ட உப சன்னதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர்கள் சார்பாக பெருமாள் புகைப்படம் நினைவு பரிசாக வழங்கினர்.

கோவிலுக்கு வந்த சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது கணவர் விசாகனுடன் நின்று பக்தர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision