ரியல் எஸ்டேட் தொழில்செய்து வந்தவரை கொன்ற வழக்கு - முக்கிய குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

ரியல் எஸ்டேட் தொழில்செய்து வந்தவரை கொன்ற வழக்கு - முக்கிய குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

திருவெறும்பூர் அருகே ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவரை அடித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவெறும்பூர் அருகே உள்ளஅம்மா குளம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ் இவரது மகன்சுந்தர்ராஜ் (37) இவரது மனைவியுடன், அரியமங்கலம் முல்லை தெருவைச்சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மகன் நிசாந்த் (எ) பன்னீர்செல்வம் அடிகடி பேசிவருவதை சுந்தரராஜின் தந்தை பொன்ராஜ் கண்டித்ததாகவும், இதனால் நிசாந்த் (எ) பன்னீர்செல்வம் மற்றும் அவரது

 கூட்டாளிகளுடன் சேர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் பொன்ராஜை இரும்பு கம்பி மற்றும் அரிவாளால் தாக்கி கொலை செய்தனர்.

 இது சம்மந்தம் 5 பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்த நிலையில் மூன்று பேர் திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.இந்நிலையில் எட்டு பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 இந்நிலையில் இந்த வழக்கின் 1-வது எதிரியான நிசாந்த் (எ) பன்னீர்செல்வம் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி எஸ்பி திரு.செ.செல்வநாகரத்தினம், பரிந்துரைத்ததின் பேரில் திருச்சி கலெக்டர்

 நிசாந்த் (எ) பன்னீர்செல்வம் மீது தடுப்பு காவல்சட்டத்திற்கு வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார் அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் நிஷாந்த் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் உள்ள நிஷாந்திடம் அதற்குரிய ஆணையை வழங்கினர்.

மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் இதுவரை மொத்தம் 14 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.என திருச்சி எஸ்பி அலுவலகத்தில் இருந்து விடுக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision