திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் இடமாற்றம்

திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் இடமாற்றம்

திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மரக்கடை அருகில் மேலப்புலிவார்டு சாலை மாநகராட்சி குடிநீர் தொட்டியின் கீழ் இயங்கி வந்தது. இந்த அலுவலகம் தில்லைநகர் 7- கிராஸ் மாநகராட்சி புதிய வணிக வளாக கட்டிடத்திற்கு நாளை 25ஆம் தேதி முதல் இடம் மாற்றம் செய்யப்படுகிறது. 28-ம் தேதி வரை அங்கு அலுவலக பணிகள் மட்டுமே நடைபெறும். 29-ம் தேதி முதல் பொதுமக்கள் தங்களது தேவைகள் தொடர்பாக பாஸ்போர்ட் அலுவலகத்தை அணுகும் வகையில் திறக்கப்படும்.

பாஸ்போர்ட் அலுவலகத்தின் இணையதள முகவரி rpo.trichy@mea.gov.in

வாட்ஸ்அப் எண் : 7598507203.

சாஸ்திரி சாலையில் ஏற்கனவே இயங்கிவரும் பாஸ்போர்ட் சேவை மையம் வழக்கம் போல் செயல்படும். இந்த தகவலை திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி ஆனந்த் ராமசாமி தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO