பெல் போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே‌ உள்ள குடியிருப்பில் 20 பவுன் நகை கொள்ளை

பெல் போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே‌ உள்ள குடியிருப்பில் 20 பவுன் நகை கொள்ளை

திருவெறும்பூரை அடுத்த பெல் நிறுவனத்தில் பாய்லர்களை தர ஆய்வு செய்வதற்காக பாபா அட்டாமிக் ஆராய்ச்சி மையத்தின் ஊழியர் ஹரி பாஸ்கரன் (53) பெல் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவர் தீபாவளி விடுமுறையை முன்னிட்டு கடந்த 12ம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊருக்கு சென்று விட்ட நிலையில் மூன்று நாட்களாக வீடு திறந்து கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஹரிபாஸ்கரனுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.


இதை தொடர்ந்து இன்று ஹரி பாஸ்கரன் ஊரில் இருந்து திரும்பி தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தன மேலும் வீட்டில் உள்ளே இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 20 பவுன் நகை ரூபாய் 3000 ரொக்கம் பணம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்த ஹரிபாஸ்கரன் கொள்ளை சம்பவம் குறித்து பெல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்  அடிப்படையில் பெல் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து கொள்ளையர் ஈடுபட்ட  மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.