திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணை!

திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணை!

திருச்சி மாவட்ட ஊர்க்காவல்படைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் Z. ஆனி விஜயா இன்று 17.11.2020 தற்காலிக பணி நியமண ஆணை வழங்கினார்கள். 

Advertisement

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அடிப்படை பயிற்சி முடித்த பிறகு ஊர்க்காவல்படை பணிகளுக்கு அழைக்கப்படுவார்கள். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) T. செந்தில்குமார், திருச்சி மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் கோபிநாத் மற்றும் ஊர்க்காவல்படை துணை வட்டார தளபதி A.M.S. முத்துமாலா தேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.