திருச்சி காட்டூர் பாலாஜி நகர் மக்களின் துயர நிலை

திருச்சி காட்டூர் பாலாஜி நகர் மக்களின் துயர நிலை

திருச்சி மாநகராட்சியில்  63 வது வார்டு காட்டூர் பாலாஜி நகரில் கடந்த ஒரு வருட காலமாக பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நடந்தும் பாதி முடிவடையாத நிலையில் உள்ளது .பாலாஜி நகர் பகுதியில் சுமார் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இப்பகுதியில் அரசு ஊழியர்கள்,காவல்துறையினர்,அரசியல்வாதிகள்,சுங்கத்துறை என அனைவரின் குடியிருப்புகள் இங்கு உள்ளது. இவர்களுக்கு பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் டெண்டர் விட்டது. இந்தப் பணிகளை மேற்கொண்டு வருபவர்கள் சாலைகளில் குழிகளை வெட்டி அப்படியே வைத்து மூடாமலும் பணிகளை பாதியிலும் விட்டு சென்றுள்ளனர.

இதனால் தினமும் அப்பகுதி மக்கள் அவதியுறும் காட்சி சொல்ல முடியாத நிலைக்கு உள்ளதாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர் .தற்பொழுது மழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலைகளில் பள்ளம் எங்கே உள்ளது என்று தெரியாமலும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது .திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து மீண்டும் வீட்டுக்கு வருவதற்குள் அவர்கள் சேற்றில் விழுந்து வீட்டிற்கு வரும் நிலையே உள்ளது.

வாகனங்கள் சிக்கிக் கொள்கின்றன. இரவு நேரங்களில் பலர் தடுமாறிக் பள்ளங்களில் விழுந்து படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

தொடர்ந்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளை பார்த்து மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை ஒரு வருட காலமாக மிகுந்த சிரமப்பட்டு இந்த சாலையை கடப்பதாக வயதானவர்கள் தெரிவிக்கின்றனர்.உடனடியாக இதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் வேண்டுகோள் .மாவட்ட ஆட்சியர் உடனே இது குறித்து மாநகராட்சி ஆணையரிடம் கேட்டு பாலாஜி நகர் மக்களின் துயரைத் துடைக்க வேண்டும் என்பது அவர்களின் விண்ணப்பமாக உள்ளது