9 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு - உற்சாகமாக வரும் மாணவர்கள்!!

9 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு -  உற்சாகமாக வரும் மாணவர்கள்!!

Advertisement

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தொற்றுநோயிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்க கிட்டத்தட்ட 9 மாதங்கள் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் மூடப்பட்டன.

Advertisement

இந்தியா முழுவதும் பல மாநிலங்கள் ஏற்கனவே தங்கள் பகுதிகளில் உள்ள கோவிட் -19 நிலைமையை ஆய்வு செய்த பின்னர் தங்கள் அதிகார வரம்பில் உள்ள பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளன. பல மாநில அரசுகள் 2021 ஜனவரியில் பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்திருந்தாலும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உயர் வகுப்புகளுக்கு மட்டுமே பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

அந்த வகையில் இன்று 10ம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டன. திருச்சி தெப்பக்குளம் பிஷப் கீபர் மேல்நிலைப்பள்ளியில் காலை முதலே மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வர ஆரம்பித்தனர். முகக் கவசங்கள் அணிந்தும், நுழைவாயிலில் பரிசோதனை செய்து மாணவர்கள் வகுப்பறைக்கு அனுமதிக்கப்பட்டனர். 9 மாத இடைவெளிக்குப் பிறகு மாணவர்கள் தங்கள் நண்பர்களை சந்தித்து உற்சாகத்தோடு பேசி சிரித்து மகிழ்வது கூடுதல் சிறப்பாக அமைந்தது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0