வீட்டில் பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

திருச்சி துறையூர் நகராட்சி பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளை கெட்டுப்போன இறைச்சி விற்பதாக பொதுமக்களிடம் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஆர் ரமேஷ் பாபு உத்தரவின் பெயரில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரெங்கநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது சிக்கம் பிள்ளையார் கோயில் அருகிலுள்ள காந்தி தெருவில் உள்ள ஒரு வீட்டில் கெட்டுப்போன இறைச்சி சுமார் 150 கிலோ அளவில் ஃப்ரீஸரில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதனை பறிமுதல் செய்து நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி அளிக்கப்பட்டது.

மேலும் கடையின் உரிமையாளர் நோட்டீஸ் வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது துறையூர் நகராட்சி  துப்புரவு அலுவலர் மூர்த்தி மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

உணவு கலப்பட புகாருக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். தொலைபேசி எண் :

99 44 95 95 95 / 95 85 95 95 95
மாநில புகார் எண் : 94 44 04 23 22.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.co/nepIqeLanO