ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயாவில் மாநில அளவிலான தமிழ் மற்றும் ஆங்கிலப் பேச்சுப்போட்டி

ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயாவில் மாநில அளவிலான தமிழ் மற்றும் ஆங்கிலப் பேச்சுப்போட்டி

திருச்சி கூத்தூர் ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா பள்ளியில் மாநில அளவில் தமிழ் மற்றும் ஆங்கில பேச்சுப்போட்டி (03.01.2025) அன்று நடைபெற்றது. இப்போட்டியில் சி.பி.எஸ்.இ./ஐ.சி.எஸ்.இ./மெட்ரிக் மற்றும் அரசு பள்ளிகள் என தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பள்ளிகள் இதில் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஜூனியர் பிரிவிலும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் சீனியர் பிரிவிலும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் 280க்கும் மேற்பட்ட மாணவர்கள் 70-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு பேச்சுத்திருவிழா நடைபெற்றது. இப்போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களிலிருந்து வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்க திருச்சியில் உள்ள பல்வேறு கல்லூரிகளிலிருந்து பேராசிரியர்கள் மற்றும் முனைவர்கள் வருகைத் தந்தனர்.

வெள்ளிக்கிழமை (03.01.2025) அன்று நடைபெற்ற முதல் சுற்றுப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் அதாவது தமிழ் பேச்சுப்போட்டியில் ஜூனியர், சீனியர் பிரிவில் முறையே 10 மாணவர்களும், ஆங்கிலப் பேச்சுப்போட்டியில் ஜூனியர், சீனியர் பிரிவில் முறையே 10 மாணவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சனிக்கிழமை (04.01.2025) இன்று அரையிறுதிப்போட்டியும், மதியம் இறுதிப்போட்டியான கிராண்ட் ஃபினாலேயும் நடைபெற உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision