தமிழ்நாடுஅறிவியல் தொழில்நுட்ப மையம் மற்றும் திருச்சி அஸ்ட்ரோ கிளப் சார்பாக சூரிய கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடு: ஏராளமானோர் பங்கேற்பு:

தமிழ்நாடுஅறிவியல் தொழில்நுட்ப மையம் மற்றும் திருச்சி அஸ்ட்ரோ கிளப் சார்பாக சூரிய கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடு: ஏராளமானோர் பங்கேற்பு:

தலைக்கு மேலே பரந்து விரிந்து கிடக்கும் வானத்தை கண்டு பல்லாயிரம் ஆண்டுகளாகவே மனிதன் வியந்திருக்கிறான்‌. வானில் வலம்வரும் கதிரவன் விண்மீன்கள் நிலவு என அனைத்தையுமே மனிதனின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. காலையில் கதிரவன் இரவில் சந்திரன் என இரவு பகல் என மாறி மாறி தொடர்ந்து வருகிற இந்தக் காலச் சக்கரத்தின் ஒரு அங்கமாகவே நாம் மாறி விட்டோம்.

PC: Harsha Ram

திடீரென ஒருநாள் பகல் பொழுதில் இருள் சூழ்ந்து நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டே விழித்தெழுந்தால் எப்படி இருக்கும்!அது சாத்தியமே இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் அப்படி ஒரு அதிசய காட்சி தான் இன்று நிகழ்ந்திருக்கிறது.

வளைவடிவ சூரிய கிரகணத்தின்போது சூரியன் முழுமையாக மறைபடாமல், நிலவு அதன் மையப் பகுதியை மறைக்கும் போது அதன் விளிம்பு பகுதி மட்டும் வளையம் போல தென்படும்.இந்த அற்புத காட்சி தான் 9 வருடங்களுக்குப் பிறகு இன்று தமிழகத்தில் திருச்சியில் தென்படுகிறது.இன்று வியாழக்கிழமை காலை 8.00 முதல் வளைய சூரிய கிரகணத்தை முன்னிட்டு அதை பாதுகாப்பாக பார்ப்பதற்காக தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருச்சி அஸ்ட்ரோ கிளப், விஞ்ஞான் பிரசார், தமிழ்நாடுஅறிவியல் தொழில்நுட்ப மையம்,கணித அறிவியல் நிறுவனம் மற்றும் இந்திய வானியல் கழகம் ஆகியவை இணைந்து
1) பாரதி பள்ளி,(ஆர் பி எஃப் ரோடு, இந்தியன் பேங்க் காலனி, திருச்சி-21.)
2) ஆர்சர்ட் பள்ளி,(கே.கே. நகர், திருச்சி -21.)
3) கிரியா பள்ளி,(நாகமங்கலம், திருச்சி. )

ஆகிய இடங்களில் மாணவர்கள் பொதுமக்கள் என திரளானோர் கண்டுகளித்து சென்றனர்.

Advertisement

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மனோகரன் அவர்கள் கூறும் போது….“2010 ஆம் ஆண்டு தமிழகத்தின் வேறு சில பகுதிகளில் தெரிந்தது.பொதுவாக சூரிய கிரகணம் என்பது எல்லா இடங்களிலும் தெரியும் ஆனால் இந்த வளையை சூரிய கிரகணம் அல்லது முழு சூரிய கிரகணம் என்பது சில பகுதிகளில் தான் தெரியும்.அதன்படி திருச்சிராப்பள்ளியில் இன்று வளைய சூரிய கிரகணம் என்பது தெரிந்தது. பாராதி பள்ளியில் கிட்டத்தட்ட 200 மாணவர்கள் இதனை கண்டுகளித்தனர்.ஒரு இடத்தில் தெரிவதற்கு கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் ஆகும். அதாவது இன்று திருச்சியில் நிகழ்ந்த சூரிய கிரகணம் மீண்டும் வருவதற்கு 300 ஆண்டுகள் ஆகும்” என்றார்.

PC: Harsha Ram

2 லட்சத்திற்கும் மேற்பட்ட சூரிய வடிகட்டிகளை உருவாக்கி தமிழகம் முழுவதும் இந்த கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பத்தின் சார்பாக செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது