ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் உண்டியல் காணிக்கை விபரம்
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவிலுக்கு திருச்சி மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மற்ற மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்களும் வெளிநாட்டு பயணிகளும் திருக்கோவிலுக்கு வருகை புரிந்து பெருமாளை தரிசனம் செய்து தங்களது நேர்த்திக் கடனை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். கோவில் உண்டியல் மாதம்தோறும் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கை கணக்கிடப்பட்டு வங்கியில் செலுத்தப்படுகிறது.
அந்தவகையில் மாதாந்திர உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணி கோவில் இணை ஆணையர்/செயல் அலுவலர் மாரியப்பன் தலைமையில் திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் உதவி ஆணையர்/செயல் அலுவலர் சுரேஷ் மேற்பார்வையில் திருக்கோயில் மேலாளர் பிரேமலதா, பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களால் திருக்கோயிலின் மாதாந்திர உண்டியல்கள் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டது.
பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் காணக்கிடப்பட்டத்தில் 1 கோடியே 24 ஆயிரத்து 547 ரூபாய்/-, 173 கிராம் தங்கம், 1255 கிராம் வெள்ளி மற்றும் 281 வெளிநாட்டு ரூபாய் தாள்கள் ஆகியவை கிடைக்கப்பெற்றன என கோவில் இணை ஆணையர் மாரியப்பன் தெரிவித்துள்ளார் .