மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசளிப்பு
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2 அன்று உலக ஈர நில நாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் 1 முதல் 5 வகுப்பு வரை ''ஏ'' பிரிவும், 6 முதல் 8 வரை ''பி'' பிரிவும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை ''சி'' பிரிவும், கல்லூரி அளவில் ''டி'' பிரிவும் என 4 பிரிவுகளாக ஓவியப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டி நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு பிரிவிலும் முதல் ஐந்து இடங்களை பிடித்த பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் 23 நபர்களுக்கு ரொக்கமாக ரூ. 60,000/- பரிசு தொகையை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்வில் கோபிநாத் வனச்சாக அலுவலர் திருச்சி மகேஸ்வரன், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திருச்சி மாவட்ட பசுமை தோழர் காட்வின் நிகில் மற்றும் பாலசுப்பிரமணியன் வனவர் உடன் இருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision