திருச்சி மாநகரத்தில் பொதுமக்கள் நலன்கருதி புறநகர் பேருந்து வழித்தடம் மாற்றம்
திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் பொதுமக்கள் நலன்கருதியும், வாகன ஓட்டிகள் வசதிகேற்ப சாலை போக்குவரத்தில் பல மாறுதல்கள் செய்தும், விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
கடந்த 5 வருடங்களாக கரூர் பைபாஸ் சாலை, சாஸ்திரிரோடு வழியாக மத்திய
பேருந்து நிலையம் வரும் புறநகர் பேருந்துகள் அனைத்தும் உக்கிரகாளியம்மன் கோவில்
அண்ணாநகர், ஸ்டூடன்ட் சாலை, MGR சிலை, நீதிமன்றம், வ.உ.சி சிலை,
மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை, ரெனால்ட்ஸ் ரோடு வழியாக மத்திய பேருந்து நிலையத்திற்கு சுற்றி சென்றுகொண்டிருக்கின்றன. காவல் ஆணையர் அவர்கள் நேற்று
20.12.21ந்தேதி போக்குவரத்து சீரமைப்பு சம்மந்தமாக MGR சிலை அருகே
போக்குவரத்து வழித்தடத்தை பார்வையிட்டு, நீதிமன்றம் வழியாக சுற்றி சென்று கொண்டிருந்த புறநகர் பேருந்துகள் மற்றும் வாகனங்களை, MGR சிலை ரவுண்டானா, ஐயப்பன்கோவில், லாசன்ஸ் ரோடு, வெஸ்டரி பள்ளி ரவுண்டானா வழியாக நேரடியாக மத்திய பேருந்து நிலையம் சென்றடைய பொதுமக்கள் நலன்கருதி போக்குவரத்து வழித்தடம் மாற்றம் செய்து ஆணையிட்டார்.
மேற்கண்ட போக்குவரத்து வழித்தடம் மாற்றத்திற்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் மறுபடியும் 21.12.21ந்தேதி இன்று MGR சிலை ரவுண்டானா சென்று சீர்செய்யப்பட்ட போக்குவரத்து மாற்றத்தில் புறநகர் பேருந்துகள் மற்றும் வாகனங்கள்
சரியாக செல்கின்றவா, ஏதேனும் போக்குவரத்து குறைபாடுகள் உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டார்கள்.
மேலும் காவல் ஆணையர் அலுவகத்தில் காவல்துறையில் பணிபுரியும் காவல்
ஆளிநர்களின் குழந்தைகள் 11 நபர்களுக்கு கல்வி உதவி தொகையும், 43 காவல் ஆளிநர்களின் குடும்பங்களுக்கு இறுதிசடங்கு உதவி தொகையும் வழங்கினார்கள்.
மேலும் காவல் ஆணையர் அவர்கள் காவலரின் குடும்பங்களுக்கிடையே பேசுகையில், ‘எல்லா குழந்தைகளும் நன்றாக படிக்கவேண்டும் எனவும், கடமையும் முக்கியம், குடும்பமும் முக்கியம் எனவும், கடமையும் குடும்பவும் இருகண்களாக பார்க்கவேண்டும்“ என அறிவுரைகள் வழங்கி, காவலரின் குழந்தைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn