திருச்சி சுங்க இலகா துறையினரின் 600 கி.மீ நீள பரப்பு எல்லை கடலில் தேசிய கொடியேந்தி சுதந்திர தின பாதுகாப்பு ரோந்து

திருச்சி சுங்க இலகா துறையினரின் 600 கி.மீ நீள பரப்பு எல்லை கடலில் தேசிய கொடியேந்தி சுதந்திர தின பாதுகாப்பு ரோந்து

நாட்டின் 75 வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கொண்டாட்டங்களை வெளிப்படுத்தி வருகிறது. 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை பொதுமக்கள்  சிறப்பாக தங்கள் வீட்டில் கொடியை ஏற்றி வருகின்றனர். மேலும் மத்திய - மாநில அரசை சார்ந்த பல்வேறு துறையினர் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை பல்வேறு விதமாக  கொண்டாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் .

இதன் ஒரு பகுதியாக திருச்சி சுங்க இலாகா துறை முதன்மை ஆணையர் உமாசங்கர் தலைமையில் மகாபலிபுரத்திலிருந்து கன்னியாகுமரி வரை 600கி.மீ நீளமுள்ள பகுதியில் கடலோர ரோந்து படகில் தேசிய கொடியை ஏற்றிக்கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நடுக்கடலில் கப்பலில் தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்தியும், சுதந்திர தின பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO