வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி விடுவார்களோ என்ற அச்சத்தில் தான் கிராம சபை கூட்டம் ரத்து செய்துள்ளனர்" - திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு பேட்டி!!

வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி விடுவார்களோ என்ற அச்சத்தில் தான் கிராம சபை கூட்டம் ரத்து செய்துள்ளனர்" - திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு பேட்டி!!

கொரோனா பரவல் காரணமாக காந்தி ஜெயந்தியான இன்று கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் அளுந்தூர் மற்றும் அந்தநல்லூர் ஒன்றியம் முள்ளிக் கரும்பூர் ஒன்றியத்துக்குட்பட்ட  ஊராட்சிகளில் தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு மக்களை சந்தித்தார். காத்திருந்த விவசாயிகளிடம்    கே.என்.நேரு,வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் பேசினார்.அந்த சட்டத்தால் விவசாயம் கார்ப்பரேட்களின் வசம் சென்று விடும்.விவசாயமும் விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என பேசினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.என்.நேரு, கிராம சபை கூட்டம் நடத்தினால் தான் மக்கள் தங்களின் குறையை தெரிவிக்க முடியும். வேளாண் சட்டத்திற்கு எதிராக 
தீர்மானம் நிறைவேற்றி விடுவார்களோ என்கிற அச்சத்தால் தான் கிராம சபை கூட்டத்தை அரசு நடத்தவில்லை. தமிழக மக்களும் விவசாயிகளும் மத்திய அரசின் சட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கு இந்த கூட்டம்  தான் சாட்சி என கூறினார்.

Advertisement

மேலும் இந்த நிகழ்வில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி மாநகராட்சி செயலாளர் மு. அன்பழகன் ஒன்றிய நிர்வாகிகள் கதிர்வேல் சேர்மன் துரைராஜ் கருப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Advertisement