புத்தாண்டை முன்னிட்டு திருச்சியில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன:

புத்தாண்டை முன்னிட்டு திருச்சியில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன:

புத்தாண்டை முன்னிட்டு விழுப்புரம் – கன்னியாகுமரி வரை திருச்சி ரயில்வே போலீஸ் 700 பேர் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு இருப்புப்பாதை காவல் துறை இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு  சென்னை தலைமை இடமாக கொண்டு சென்னை மாவட்டமும் அதில் 23 இ

ருப்பதை காவல் நிலையங்களும், திருச்சியை தலைமையிடமாக கொண்டு 24 இருப்புப்பாதை காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.ரயில் பயணிகள் தங்களுடைய உதவிக்காக 1512 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ரயில் பயணிகளுக்கு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வும், காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளது.

Advertisement

2019ஆம் ஆண்டு நகை திருட்டு வழக்குகளில் 53 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 150 பவுன் நகைகளை மீட்க பட்டுள்ளது. மேலும் 335 செல்போன் திருட்டு வழக்குகளில் 254 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, 94 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நடப்பாண்டில் திருச்சி மதுரை மற்றும் திருநெல்வேலி உட் கோட்டங்களில் 827 சிறுமிகள் சிறுவர்கள் மீட்கப்பட்டு 809 குழந்தைகள் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்படும் 18 குழந்தைகள் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டு குழந்தைகள் தடுப்புப் பிரிவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

புத்தாண்டை முன்னிட்டு விழுப்புரம் – கன்னியாகுமரி வரை திருச்சி ரயில்வே போலீஸ் 700 பேர் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்.செல்போன் பேசிக் கொண்டு, செல்ஃபி எடுத்து கொண்டே ரயிலில் பயணம் செய்வதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும்… ரயில் தண்டவாளங்களை பாதுகாப்புடன் கடக்க வேண்டும். ரெயில் விபத்துகள் மக்களின் கவனக் குறைவால் மட்டுமே  நடைபெறுகிறது… விபத்துகளை திருட்டுகளை தடுக்க பயணிகள் கவனமுடன் இருக்க வேண்டும்
என்று திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்தார்.