அகில இந்திய அளவில் கடிதம் எழுதும் போட்டி

இந்திய அஞ்சல் துறையால் கடந்த ஆண்டு அகில இந்திய அளவில் மகாத்மா காந்திக்கு கடிதம் எழுதும் போட்டி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.அதே போல் இந்த ஆண்டும் கடிதப் போட்டியை உலக அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த போட்டிக்கான தலைப்பு “அன்பான பாபு நீங்கள் அழியாதவர்” என்ற தலைப்பில் கடிதம் எழுதும் போட்டி திருச்சி முதுநிலை தபால் அலுவலகதால் நடத்தப்படுகிறது. கடிதங்கள் அனுப்ப 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.கடந்த ஆகஸ்ட் மாதமே கடிதங்கள் எழுத துவங்கிய நிலையில் வருகிற 30-ம் தேதி இறுதி நாளாகும். கடிதங்களை ஸ்கேன் செய்து மைகவ் (My Gov Portal) என்ற அரசு இணையதளத்திலும் வருகின்ற 30ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யலாம்.

போட்டிகள் 4 பிரிவாக நடத்தப்படுகிறது. இன்லாண்டு லெட்டர் பிரிவு மற்றும் கடித உறை பிரிவில் 18வயதுக்கு உட்பட்டோர்க்கு தனியாகவும் 18 வயதுக்கு மேற்பட்டோர்க்கு தனியாகவும் நடத்தப்படுகிறது. நேரில் வந்து கொடுக்கும் கடிதங்கள் மட்டும்தான் ஏற்றுக் கொள்ளப்படும். ஏ-4 தாளில் கடித உறை பிரிவில் 1000 வார்த்தைக்கு மிகாமலும் இன்லாண்டு லெட்டர் பிரிவில் எழுதுபவர்கள் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும் தமிழ் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஏதேனும் ஒரு மொழிகளில் எழுதி அனுப்பலாம். கையால் எழுதப் பட்ட கடிதங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

வெற்றி பெற்ற கடிதங்களுக்கு மாநில அளவில் முதல் 3 இடங்களுக்கு ₹ 25000,₹10000,₹5000 என்றும் அகில இந்திய அளவில் முதல் 3 இடங்களுக்கு ₹50000,₹25000,₹10000 என்று பரிசுகள் வழங்கப்படும்.

கடிதத்தின் மேல் “1.1.2019 அன்று என் வயது 18க்கு மேல் அல்லது 18க்கு கீழ் என சான்று அளிக்கிறேன்” என்ற வாசகத்தை எழுதிய கையெழுத்து இட வேண்டும்.