ஹாக்கி போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் வீராங்கனைகளுக்கு சீருடை, உபகரணங்கள் அமைச்சர் வழங்கினார்

ஹாக்கி போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் வீராங்கனைகளுக்கு சீருடை, உபகரணங்கள் அமைச்சர் வழங்கினார்

திருச்சிராப்பள்ளி மாவட்ட அண்ணா விளையாட்டு அரங்கில், ஹாக்கி விளையாட்டிற்கான சீனியர் மற்றும் ஜீனியர் வீராங்கனைகளின் 10 நாள் பயிற்சி முகாம் நிறைவடைந்து, ஹாக்கி 
இந்தியா அமைப்பின் சார்பாக, தேசிய அளவில் உத்தரப்பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் அக்டோபர் 21 முதல் நவம்பர் 1 வரை நடைபெறவுள்ள போட்டிகளுக்குச் செல்ல உள்ளனர்.

இதனையொட்டி, தமிழகத்தின் சார்பில் பங்கேற்கும் இந்த அணிகளின் 36 வீராங்கனைகளுக்கு 1.5 லட்சம் மதிப்புள்ள சீருடைகள் மற்றும் உபகரணங்களை (Sports Kit) நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (15.10.2021) வழங்கி வாழ்த்தினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு தலைவர் சேகர் ஜே.மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn