தற்கொலைக்கு தூண்டிய நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
திருச்சி மாவட்டம், வையம்பட்டி காவல் நிலையத்தில், மணியாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வாதி வெங்கடேஷ் என்பவருக்கும், எலமனம் கிராமத்தைச் சேர்ந்த நாகலட்சுமி என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற மூன்று மாதங்களுக்கு பிறகு நாகலட்சுமியின் அப்பா பெருமாள் மற்றும் அவரது உறவினர்கள் வெங்கடேஷின் தந்தை செல்வத்தின் பெயரிலுள்ள 3 ஏக்கர் நிலத்தை நாகலட்சுமியின் பெயரில் எழுதி வைக்கும்படி வற்புறுத்தியன் பேரில், இரு குடும்பத்தாருக்கும் தகராறு ஏற்பட்டு வெங்கடேஷ் கொடுத்த புகாரின் பேரில் வையம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, செல்வத்தை பழிவாங்கும் எண்ணத்தில் நாகலட்சுமியின் உறவினர்கள்
மணப்பாறை அனைத்து மகளில் காவல் நிலையத்தில் செல்வம் நாகலட்சுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்ததில், இரு தரப்பினரும் சமாதானமாக போவதாக எழுதி கொடுத்துவிட்டு, செல்வத்தை
எதிரிகள் அசிங்மாக திட்டியும், மன உளைச்சலை ஏற்படுத்தியதை தொடர்ந்து செல்வம் தனது இறப்பிற்கு காரணம் தனது மருமகள் நாகலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் தான் காரணம் என எழுதிவைத்து பூச்சி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் தொடர்பாக வையம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கின் விசாரணை செய்த மாவட்ட முதன்மை நீதிமன்றம் திருச்சியில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 28.10.2021 ஆம் தேதி வழக்கின் எதிரிகள் (1)செல்வம், (2) கிருஷ்ணமூர்த்தி, (3) நாகலட்சுமி, ஆகியோர்கள் செலவத்தின் தற்கொலைக்கு காரணமானவர்கள் என
தீர்ப்பளிக்கப்பட்டு மேற்படி மூன்று எதிரிகளுக்கும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி குற்ற வழக்கை திறம்பட விசாரணை செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கிலிருந்து குற்றவாளி தப்பவிடாமல் தகுந்த சாட்சியங்களை முன்னிறுத்தி தண்டனை பெற்று தந்த காவல் ஆய்வாளர், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி மற்றும் இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்ற அலுவல் புரிந்த பெண் காவலர் ஆகியோரை திருச்சி சரக காவல் துணைத்தவைர் சரவணசுந்தர் பாராட்டி பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கி வெகுவாக பாராட்டினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision