திருச்சியில் மியாவாக்கி காடுகள் -மரக்கன்றுகள் நட்டு வைத்து பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்

திருச்சியில் மியாவாக்கி காடுகள் -மரக்கன்றுகள் நட்டு வைத்து பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டம், காணக்கிளிய நல்லூர் கிராமத்தில் இன்று(23.01.2023) மியாவாக்கி முறையில் அடர்வனக்காடுகள் உருவாக்கிடும் வகையில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

 இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார்.,  மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ. சௌந்தரபாண்டியன், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் செ. ஸ்டாலின் குமார், முசிறி சட்டமன்ற உறுப்பினர் ந. தியாகராஜன், , மாவட்ட ஊராட்சி தலைவர் த. ராஜேந்திரன்வருவாய் கோட்டாட்சியர்  வைத்தியநாதன், உதவி இயக்குனர் ஊராட்சிகள்  கங்காதரணி, காணக் கிளியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சிங்கராயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 #திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் வழி அறிய

 https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn