அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் ஏஐடியுசி 15வது மாநில மாநாடு திருச்சியில் செப்டம்பர் 2ம் தேதி ஊர்வலத்துடன் தொடங்கியது. 4ம் தேதி வரை நடைபெறும் மாநாட்டில் செப் 3ம்தேதி (சனிக்கிழமை) காலை 9.30 மணியளவில் வரவேற்பு குழு தலைவர் மாமன்ற உறுப்பினர் க. சுரேஷ் முன்னிலையில் மாநாட்டை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
ஜி.மணி ஆச்சாரி பி.ராமராவ் நிணைவரங்கத்தில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள எல் .கே .எஸ் மஹாலில் 15 வது மாநில மாநாட்டு கொடியை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சம்மேளனத்தின் தலைவர் ஆறுமுகம் கொடி ஏற்றி வைத்தார். மறைந்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் 15வது மாநாட்டையொட்டி 15 கொடிகளை மண்டல தலைவர்கள் ஏற்றி வைத்தனர். தியாகிகள் ஸ்தூயில் மலர் அஞ்சலி செத்தப்பட்டது
மாநாட்டுக்கு கஜேந்திரன், துரைமதிவாணன், மணவழகன் ஆகியோர் தலைமைகுழுவாக தேர்ந்து எடுக்கப்பட்டனர். மாநாட்டு வரவேற்ப்புகுழு செயலாளர் சுப்ரமணியன் வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர்கள் குருதாஸ்குப்தா தா.பாண்டியன், சேதுராமன் உட்பட மறைந்த தோழர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டை தொடங்கி வைத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரைநிகழ்தியபோது.... நாள் ஒன்றுக்கு ஒரு கோடியே எம்பத்தி ஐந்து லட்சம் பேர் பயணிக்கிறார்கள். அதில் குறிப்பாக பல லட்சம் மாணவ மாணவிகளை பத்திராமாக பள்ளிக்கும் வீட்டுக்கும் அழைத்து செல்லக்கூடிய உங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் உங்களின் கோரிக்கைகளை நிச்சயம் தமிழக முதல்வர் நிறைவேற்றி தருவார் என்று உரை நிகழ்த்தினர்
பொதுச் செயலாளர் ஆறுமுகம் வேலை அறிக்கையும் அமைப்பு நிலை அறிக்கையினை துணைப் பொதுச் செயலாளர் செல்வராஜ் சமர்ப்பித்து உரையாற்றினார். தொடர்ந்து பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO