திருச்சியில் முன்னாள் தலைமை நீதிபதி கற்பக விநாயகத்திற்கு வரவேற்பு

திருச்சியில் முன்னாள் தலைமை நீதிபதி கற்பக விநாயகத்திற்கு வரவேற்பு

 முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும், அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் கெளரவ தலைவருமான நீதியரசர் எம். கற்பகவிநாயகம் திருச்சிக்கு வருகை தந்தார். அவரை அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனர் தலைவர் ஆர். கே. குமார் தலைமையில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.


இச்சந்திப்பு நிகழ்வில் நீதியரசர் கற்பகவிநாயகம் நிர்வாகிகளிடம் சமூக பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக விழிப்புணர்வு துண்டறிக்கை மற்றும் துணி பைகளை அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிர்வாகிகளிடம் வழங்கி இவ் விழிப்புணர்வு பணிகளை பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் மத்தியில் கொண்டு சென்று தொடர்ந்து விழிப்புணர்வு செய்து சுற்றுச்சூழல் பாதுகாப்பதின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து செயல் படவேண்டும் என்று கூறினார்.


இந்நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிர்வாகிகள் கெளரவ தலைவரும் வழக்கறிஞருமான எஸ். அண்ணாதுரை, மாவட்ட தலைவர் செந்தில்குமார் மாவட்ட செயலாளர் வடிவேல் நாகராஜன், துணை தலைவர் டாக்டர் எஸ்.லாரன்ஸ், இணைச் செயலாளர் வழக்கறிஞர் இளையராஜா, வழக்கறிஞர் ஆறுமுகம், மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா, இணைச் செயலாளர் அல்லிக் கொடி, விளையாட்டு பிரிவு செயலர் சுரேஷ் பாபு, நிர்வாகிகள் மணி மைக்கேல் அனுஷ்மா நந்தினி மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும், நடிகருமான ஆர். ஏ. தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் சென்னையில் செப்டம்பர் 3 மற்றும் 4 ம் தேதி நடைபெறவுள்ள மாநில குத்துச்சண்டை போட்டியில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பி.எச்.இ.எல் குத்துச்சண்டை பயிற்சியாளர் எம்.எழில்மணி தலைமையில் கலந்து கொள்ளவுள்ள குத்துச்சண்டை விளையாட்டு வீரர்களுக்கு நீதியரசர் எம். கற்பகவிநாயகம் மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனர் தலைவர் ஆர். கே. குமார் அவர்களும் அமைப்பின் நிர்வாகிகளும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO