மகளிர் சுய உதவி குழு தின விழா-121.05 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

மகளிர் சுய உதவி குழு தின விழாதிருச்சியில் 121.05 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்கலெக்டர், எம்எல்ஏக்கள், மேயர் வழங்கினார்கள்தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி வாயிலாக மகளிர் சுய உதவிக்குழு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடந்த விழாவில்
வங்கிக் கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து திருச்சி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் கலந்துகொண்டு 1,272 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 121.05 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பிரதீப் குமார் அவர்கள் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அமைக்கப்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு அவர்களின் சேமிப்புத்
தொகையினை அதிகரிக்கும் பொருட்டு ஆதார நிதியாக ஊரகப்பகுதி சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 15,000 வீதமும் நகர்ப்புற குழுக்களுக்கு 10,000 ரூபாய் வீதமும் சுழல் நிதி வழங்கப்பட்டு வருகிறது. சுழல் நிதியும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஊரகப்பகுதியில் அமைக்கப்பட்ட சுய உதவிக் குழுவிற்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தொழில் நடவடிக்கை மேற்கொள்ளும் குழுக்களுக்கு 50ஆயிரம் முதல் 1.50 லட்சம் வரை சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்பட்டு வருகிறது.
வங்கி கடன் இணைப்பு சுய உதவிக் குழுக்களுக்கான கடன் பெறும் உரிமை என்பது எளிதாக கடன் நிறுவனங்களை அணுகுவது சரியான நேரத்தில் தேவைக்கேற்ப குறைந்த வட்டி கடன் பெறுவது ஆகியவற்றின் மூலம் உறுதி செய்யப்படுகிறது.அதன் அடிப்படையில் 18,419 சுய உதவி குழுக்களுக்கு வங்கிகள் மூலம் நேரடி கடனாக ₹4160.56 கோடி வழங்கப்பட்டுள்ளது. என்று மாவட்ட ஆட்சித் தலைவர் மா பிரதீப் குமார் அவர்கள் கூறினார் நிகழ்ச்சியில் மேயர் அன்பழகன்,
எம்.எல்.ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின் குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், உதவி ஆணையர் சண்முகம், மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குனர் சுரேஷ், மண்டலக்குழுத் தலைவர் துர்கா தேவி, கவுன்சிலர் கலைச்செல்வி மற்றும் நகர்ப்புற மற்றும் ஊரக புற பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision