எசனைக்கோரை அரசு நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

எசனைக்கோரை அரசு நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

எசனைக்கோரை அரசு நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா.திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஊ.ஒ.நடுநிலைப் பள்ளி , எசனைக்கோரைப் பள்ளியில் 114 ஆவது ஆண்டு விழாவானது முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது.காலை 09.31 மணிக்குலால்குடி சட்டமன்ற உறுப்பினர் .அ. சௌந்தரபாண்டியன் கலந்து கொண்டு

அவருடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட உள்ள புதிய இரண்டு வகுப்பறைக் கட்டிடம் அடிக்கல் நாட்டு விழாவைத் தொடங்கி வைத்தார்.மாலை 04.31 மணிக்கு முன்னாள் மாணவரும், ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்க முன்னாள் தலைவருமான சரவணன் தலைமையில், வட்டார வளமைய மேற்பார்வையாளர் குமார் அவர்களின் முன்னிலையில் நூற்றாண்டு விழா சுடரானது மேலவாளாடி பாலத்திலிருந்து Band வாத்திய வாசிப்புடன் எடுத்து வரப்பட்டு,விழா மேடையில் முன்னாள் மாணவர் ப.முருகானந்தம் அவர்களின் உறுதிமொழியுடன் ஏற்றப்பட்டது.

 நூற்றாண்டு விழா அறிக்கையை பள்ளித் தலைமை ஆசிரியர் திருமாவளவன்114 ஆண்டு நிகழ்வுகளின் தொகுப்பாக வாசித்தார்.இந்நிகழ்வில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி நாராயணசாமி, பெரம்பலூர் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மயில்வாகனன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான் சுரேஷ், கலைக்காவிரி உதவிப்பேராசிரியர் சதீஸ்குமார், ஆசிரியக்கவிஞர் இளஞ்சேட்சென்னி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் மணிகண்டன், இலால்குடி பொறுப்பாளர் ரகுபதி, ஓய்வுப்பெற்ற தலைமை ஆசிரியர் ஸ்டீபன், கல்வியாளர் அப்துல்காதர், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவி காயத்ரி, தபால் துறை அலுவலர் அஜித்குமார்,

 நன்கொடையாளர்கள் நந்தகுமார், தெற்கு சத்திரம் முன்னாள் தலைவர் மைக்கேல்ராஜ், ஈசன் அறக்கட்டளை & ஈடெக்ஸ் கார்மெண்ட்ஸ் உரிமையாளர் சுரேஷ்குமார், கிராமநிர்வாக அலுவலர் சங்கர், PMK கண்ணன், பாட்ஷா ராஜ்குமார் , சாந்தா ஐயப்பன், STK செரி, முன்னாள் ஆசிரியர்கள் பானுமதி, சார்லட் எட்வினா , விஜயவல்லி, உமாதேவி, அந்தோணியம்மாள், கிரேஸி, ஜெயஷீலா, சாந்தி ஆகியோருடன் இலால்குடி ஒன்றிய பள்ளிகளிலிருந்து ஆசிரியப் பெருமக்களும், முன்னாள் மாணவர்களும், ஊர் பொதுமக்களும், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி வாழ்த்தினர். முன்னதாக அறிவியல் ஆசிரியை து.செல்வி வரவேற்றார்.விழாவில் மாணவச் செல்வங்களின் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் டிஜிட்டல் வடிவ திரை அமைப்புடன் கண்கொள்ளா காட்சிகளின் விருந்தாக விழாக் கோலமாக இருந்தது.

முப்பெரும் விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் கீதா, மேரி கிறிஸ்டினா, ரோஸ்லின் இன்பென்டா மேரி, ரோஸ்லின், ஷமீம், ஜெயராக்கினி, ஜாஸ்மின் சில்வியா, சக்திவேல் ஆகியோருடன் சத்துணவு, காலை சிற்றுண்டி பணியாளர்கள், பெற்றோர்கள் செய்திருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision