பீஃப் சாப்பிடலாமா என்பதற்கு மட்டும் என் தட்டு என் உரிமை- என் படிப்பு என் உரிமை கிடையாதா . இது மட்டும் ஸ்டாலின் உரிமையா?  எச்.ராஜா பேட்டி

பீஃப் சாப்பிடலாமா என்பதற்கு மட்டும் என் தட்டு என் உரிமை- என் படிப்பு என் உரிமை கிடையாதா . இது மட்டும் ஸ்டாலின் உரிமையா?  எச்.ராஜா பேட்டி

திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்..... அமலாக்கத்துறை ரெய்டு அரசியல்வாதிகள் அவர்களுடைய அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் ,வியாபார நிறுவனங்களில் நடப்பது வழக்கம் ஆனால் அரசாங்கத்தின் ஒரு துறை தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்திருப்பது சற்று நிமிர்ந்து உட்கார்ந்து பார்க்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறையின் முதல் கட்ட அறிக்கையில் 3 விதமான விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது டாஸ்மாக்கில் அதிகபட்ச சில்லறை விலை எம் ஆர் பி ரேட்டை விட அதிக விலைக்கு மது விற்பனை நடந்துள்ளது , மது விநியோக ஆலைகளுக்கு மது உற்பத்தி ஆலைகள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளனர், டாஸ்மார்க் பணியாளர்கள் நியமனம் , பணியிட மாற்றம் ஆகியவற்றில் உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு செய்திருக்கிறார்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

டாஸ்மார்க் டென்டர்களிலும் முறைகேடு நடந்துள்ளது, டென்டரில் பாரபட்சம் பார்ப்பது, உறவினர்களுக்கு சலுகை அளிப்பது லஞ்சம் ஆகியவை அரங்கேறியுள்ளது. பார் டெண்டர் விடுவதிலும் உரிமைகள் மீறப்பட்டுள்ளது. பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. டாஸ்மார்க் ஊழலில் 2 லட்சம் கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளது. 

டெல்லியில் மணி ஓடியா கைது செய்யப்பட்டார் அந்த நூலைப் பிடித்துக் கொண்டு வந்தால் அது ஹைதராபாத்தோடு நிற்காது அங்கு கவிதா கைது செய்யப்பட்டார் இது சென்னைக்கும் வரும் டெல்லியில் பிடிபட்ட சாராய ஊழல் சத்தீஸ்கரில் பிடிபட்ட சாராய ஊழல் அதைவிட பல மடங்கு தமிழகத்தில் இந்த டாஸ்மார்க் ஊழல் நடந்துள்ளது. எப்படி டெல்லியில் துணை முதலியார் அமைச்சர் ஊழலில் ஈடுபட்டாரோ அது போல் தமிழ்நாட்டிலும் இருக்கும். இது முழுமையாக விசாரணை செய்யப்பட்டு விரைவில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் டெல்லி போல ஹைதராபாத் போல திரைக்குச் செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி நாளை மறுநாள் 17ம் தேதி சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

 5000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகவும், மதுபான கிளப்புக்கு எதிராகவும் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோம் என்றார்.தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகமாக உள்ளனர் எனக் கூறிய கனிமொழி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தில் டாஸ்மாக்கை ஒழிப்போம் என்றார். திமுக எதெல்லாம் நடக்காதோ அதற்கெல்லாம் முதல் கையெழுத்து எனக் கூறுவர்.திராவிட முன்னேற்றக் கழக தலைமைக்கு இந்த அமலாக்கத்துறை சோதனை மூலமாக பைத்தியம் பிடித்துள்ளது. முதலமைச்சர் ரூபாய் சிம்பலை மாற்றுகிறார் அவருக்கு அரசியலமைப்பு சட்டங்கள் பழக்கவழக்கங்கள் தெரிந்திருக்கிறதா என தெரியவில்லை

அமைச்சர் துரைமுருகன் வடமாநிலத்தவரை பற்றி தவறாக பேசி வருகிறார் ஒரு பக்கம் மனைவி, துணைவி என இருந்தவர்கள் உங்கள் தலைவர்கள்.சென்னையில் கழிவறை கட்டுவதற்கு ஒரு கோடி ரூபாய் என மாநில அரசு கட்டி வருகிறது ஆனால் மத்திய அரசு 15 ஆயிரம் ரூபாயில் கழிவறை கட்டியுள்ளது.அனைத்து இடங்களிலும் ஊழல் நிறைந்த ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. அதற்கு சிகரம் வைத்தார் போல் இந்த டாஸ்மார்க் ஊழல் அமைந்துள்ளது. இந்த ஆட்சியை தூக்கி எறியாமல் தமிழகத்தை காப்பாற்ற முடியாது என மக்களுக்கு புரிய வைக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும்.டெல்லி ஊழலுக்கும் தமிழக டாஸ்மாக் முறைகேடுக்கும் தொடர்பில்லை என செந்தில் பாலாஜி கூறியுள்ளாரே என கேட்டபோது ..... ஆம் இதை தனியாக செய்துள்ளோம் எனக் கூறுகிறார் அதை நான் ஒப்புக்கொள்கின்றேன்.

செந்தில் பாலாஜி தான் சட்டரீதியாக 475 நாள் ஜெயிலில் இருந்துள்ளாரே சட்டரீதியாக தானே அவர் உள்ளே இருந்தார் என்றார்.தமிழக காவல்துறையினர் அராஜகத்தின் உச்சக்கட்டத்தில் உள்ளனர் திருச்சி தென்னூர் உக்கர காளியம்மன் கோவிலில், கோவிலில் இடத்தில் பதாகை வைத்ததற்காக பாஜகவினர் ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழக காவல்துறையின் வழக்குகளில் உண்மைத்தன்மை 20% தான் இருக்கும் ஆனால் அமலாக்கத் துறையினர் எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு இடத்திற்கு செல்ல மாட்டார்கள் அவர்களது வழக்குகளின் உண்மை தன்மை 95% இருக்கும் என்றார்.

*டாஸ்மாக்கில் கொள்ளை அடித்த பணம் இருக்கும் திமிரில் தான் திமுகவினர் 200 இடங்களில் ஜெயிப்போம் எனக் கூறி வருகின்றனர்*டாஸ்மார்க் ஊழல் அவர்களின் தலைமைக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. அரசாங்கத்தின் உச்சபட்ச தலைமைக்கு தெரியாமல் இவ்வளவு ஆழமான ஒரு ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பது எனது எண்ணம். மத்திய அரசை எதிர்ப்பது என்பது திமுகவின் வாய்ச்சவடால், அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு எனக் கூறிய திமுகவினர் தைரியம் எவ்வளவு தூரம் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். ஊழலுக்காக டிஸ்மிஸ் செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்று உண்டு என்றால் அது திமுக தான். எமர்ஜென்சி காலத்தில் கைது செய்த இந்திராகாந்தியிடமே கதவை சாத்திக்கொண்டு நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக எனக் கூறிய உங்களின் தைரியம் பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும் என்றார்.

கணினி ஆசிரியர்களுக்கு என மத்திய அரசு 15 ஆயிரம் ரூபாய் பணம் தருகிறது. ஆனால் நீங்கள் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களை வைத்து கணினி பாடம் நடத்துகிறீர்கள். மத்திய அரசு கொடுக்கும் பணத்தை எல்லாம் வாயில் போட்டுக் கொள்வதா என கேள்வி எழுப்பினார். தமிழகத்தின் கடன் 5 லட்சம் கோடி அதிகமாகி தற்போது ஒன்னே கால் மடங்கு கூடி உள்ளது. எள் முனை அளவு கூட நிர்வாக திறனற்ற அரசாக திமுக அரசு உள்ளது. இதனுடன் போக்குவரத்து துறை, மின்சாரத்துறை கடன்களையும் சேர்த்து 31.03.2026 ல் தமிழ்நாட்டினுடைய மொத்த கடன் 15 லட்சம் கோடியாக இருக்கும் என்றார்.இதிலிருந்து தமிழகம் மீட்கப்பட வேண்டும் என்றால் பாரதப் பிரதமர் வழிகாட்டுகின்ற ஓர் ஆட்சி அமைந்தால் நமக்கு பாதுகாப்பாக இருக்கும்.

ராமநாதபுரத்தில் விமான நிலையம் என அவர்கள் அறிவிக்கலாம் ஆனால் அதை செயல்படுத்துவது யார் மத்திய அரசுதான் செயல்படுத்த வேண்டும். சென்னை மெட்ரோ பணிகள் மாநில அரசின் ப்ராஜெக்ட் என கூறினார்கள் ஆனால் 40% மட்டுமே மாநில பங்களிப்பு உள்ளது 60% மத்திய அரசு பங்களிப்புடன் பணி நடைபெறுகிறது. நேற்றைய பட்ஜெட்டில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் குறித்து அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல 40% மாநில பங்கு தான் மீதி 60 சதவீதம் மத்திய அரசுதான் கொடுக்க வேண்டும் நீங்கள் எவ்வளவு கோரிக்கைகள் வைத்தாலும் தமிழக மக்களுக்காக பாரதிய ஜனதா கட்சி செய்யும் என்றார்.செந்தில் பாலாஜி முதல்முறையாக கைது செய்யப்பட்டபோது தொட்டுப்பார் எனக் கூறிய முதல்வர் தற்பொழுது அமைதியாக இருப்பது ஏன் எனக் கேட்டபோது.......

முதலமைச்சராக இருந்தால் மட்டும் என்ன விதிவிலக்கா டெல்லியில் கெஜ்ரிவாலை கைது செய்யவில்லையா.... யாராக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான் என்றார்.மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பேசிய ஆசிரியரை கைது செய்துள்ளனரே என கேட்டபோது..... மாணவர்களுக்கு கல்வியில் தடை போடுவது தவறு. சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார் என் மாநில மக்கள் 10 மொழி கூட படிக்கட்டும் என்று, ஆசிரியர்களுக்கு உரிமை உள்ளது கேட்பதற்கு, பெற்றோர்களுக்கு உரிமை உள்ளது எங்கள் குழந்தைகளுக்கு 3 மொழி படிக்க வேண்டும் என கேட்பதற்கு என்றார். சேலத்தில் நடைபெற்ற நிகழ்வு வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆசிரியர்கள் வெளியில் வரவேண்டும் உங்கள் மனதில் இருப்பதை கூறுங்கள் மாணவர்களுக்கு எவ்வளவு மொழி வேண்டுமானாலும் நாங்கள் கற்றுத் தருவோம் என கூறுங்கள் என்றார். பீஃப் சாப்பிடலாமா என்பதற்கு மட்டும் என் தட்டு என் உரிமை எனக் கூறினீர்கள் அல்லவா - என் படிப்பு என் உரிமை கிடையாதா . இது மட்டும் ஸ்டாலின் உரிமையா மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா என்றார்*

நீட் வந்தால் அரசு பள்ளிக்கூட மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறுகிறீர்கள் அல்லவா தனியார் பள்ளியில் ஆசிரியரின் சம்பளம் 10,000 அல்லது 12,000 ரூபாய். அரசு பள்ளியில் ஆசிரியர்கள் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்கள். ஆனால் தனியார் பள்ளியில் இருக்கும் தரம் அரசு பள்ளியில் இல்லை. அரசு தவறு செய்கிறது அல்லவா, மகேஷ் பொய்யாமொழி அரசியல் பண்ணிக் கொண்டிருக்கிறார் பள்ளிக்கூடங்களை அவர் கவனிப்பதில்லை என்றார். மும்மொழிக் கொள்கை தனியார் பள்ளிகளில் இருக்கும் என்றால் அரசு பள்ளிகளிலும் வேண்டும். 7ம் தேதி ஆரம்பித்த சம கல்வி கையெழுத்து இயக்கத்தில் இதுவரை 14 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர் என்றார்.திருச்சியில் வருகின்ற 23ஆம் தேதி அண்ணாமலை தலைமையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனரே என கேட்டபோது ..... அழிவில் விளிம்பில் இருக்கின்ற அரசாங்கம் இது , இது ஆணவமிக்க நடவடிக்கை. நாங்கள் மீறி கூட்டம் நடத்தினால் என்ன செய்வீர்கள் அதிகபட்சம் கைது செய்வீர்கள், தாராளமாக கைது செய்யுங்கள் சிறைச்சாலையையும் தனியார் மண்டபங்களையும் காலி செய்து தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள் என்றார். 

ஜனநாயக ரீதியிலான ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு தடை விதிக்கின்ற காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக கூட நாளை நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றார். 

எங்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளது. காவல்துறை இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றார். 

தொகுதி மறு சீரமைப்பு குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் பக்கத்து மாநில முதல்வர்களை அழைத்து இருப்பது புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மேல் வந்து படு என்பது போல் உள்ளது என்றார்.

2001 இல் அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த பொழுது இத்திட்டத்தை 25 ஆண்டுகள் ஒத்தி வைத்தார். தற்போது தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வர வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் பில் பாஸ் செய்ய வேண்டும் அதன் பிறகு தான் செய்ய முடியும். தற்பொழுது ஸ்டாலின் தொகுதி மறு சீரமைப்பு பற்றி பேசுவது அவர்களுடைய முன்மொழி அரசியலை மக்கள் ஏற்க மறுத்த காரணத்தினால் இதைப்பற்றி அவர் பேசுகிறார். அதற்கு உள்துறை அமைச்சர் அமீத்ஷா உரிய பதிலும் அளித்துவிட்டார். 

உத்திரப்பிரதேசம் பீஹாரை ஒப்பிடுகையில் தமிழகத்தில் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதால் மக்கள் தொகை குறைந்துள்ளது. அதனால் நாங்கள் தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் நஷ்டப்படக் கூடாது என கூறுகிறீர்கள் .... இந்து முன்னணி நிறுவனர் ராமகோபால் ஏற்கனவே ஹிந்துக்கள் எண்ணிக்கை குறைந்து விடுவோம் நாம்தான் குடும்ப கட்டுப்பாட்டை முறையாக கடைபிடிக்கிறோம் இஸ்லாமியர்கள் கடைப்பிடிப்பதில்லை அவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து விடும் எனக் கூறியிருந்தார் அதை நீங்கள் நியாயம் என ஏற்றுக் கொள்கிறீர்களா.....வாருங்கள் இது குறித்து விவாதிப்போம் .தற்போது முதல்வரே திருமணத்திற்கு சென்றால் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள் என சொல்ல வேண்டிய நிலை வந்து விட்டதல்லவா. அன்று நாங்கள் சொன்னபோது நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை தமிழன் என்றால் ஹிந்து அவன் தமிழன் தான் அவன் எண்ணிக்கை குறைகிறது என நாங்கள் அன்று சொன்னோம் அன்று நீங்கள் எங்களை பார்த்து மதவாதி என்றீர்கள் . இன்று நீங்களே அதே கருத்தை வலியுறுத்தி வருகிறீர்கள் என்றைக்கும் பின்புத்தி இருக்க வேண்டாம் முன்பே யோசித்து செய்ய வேண்டும். ஹிந்து அமைப்புகள் சொல்வதெல்லாம் சரியாக இருக்கும் என்பதை இப்பொழுதாவது இந்த திராவிட மாடல் அரசு புரிந்து கொண்டால் சரி என்றார்.இந்த தமிழக பட்ஜெட் வருகின்ற 2026 தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை... ஒதுக்கப்பட்ட நிதிகளை நடைமுறைப்படுத்தினால் தானே என கேள்வி எழுப்பினார். 

இந்த பட்ஜெட் தமிழகத்தை அனைவரும் திரும்பிப் பார்க்கும்படி உள்ளது என தங்கம் தென்னரசு கூறியுள்ளார். கொஞ்சம் குஜராத்தை பாருங்கள் அங்கே உள்ள நிதி அமைச்சர் மற்றும் முதல் அமைச்சரிடம் பாடம் கற்றுக் கொள்ளுங்கள். ஏனென்றால் அவர்கள் டாஸ்மார்க் வருமானம் இல்லாமல் 19 ஆயிரம் கோடி கையிருப்புடன் உபரி பட்ஜெட் போட்டுள்ளனர். திரும்பிப் பார்ப்பது போல் அதுதான் உள்ளது இது இல்லை என்றார்.பட்ஜெட் போடுவது எப்படி பொருளாதாரத்தை கையாளுவது எப்படி என்பதை குஜராத்திடம் கற்றுக் கொள்ளுங்கள் என்றார். தமிழ்நாட்டினுடைய நிதிநிலைமை மிக மோசமான பொருளாதார நிதி நிலைமையை காட்டுகிறது.அது தவிர 2000 ஏக்கரில் புதிய நகரம் அமைக்கப்படும் எனக் கூறியுள்ளீர்களே அதில் இன்று என்ன முன்னேற்றம்... நாளை என்ன முன்னேற்றம் என தேர்தல் முடியும் வரை தினமும் கேட்போம். 2000 ஏக்கர் என யாரை ஏமாற்றுகிறீர்கள். நான்குநேரி பொருளாதார மையம் என்ன ஆனது என கேள்வி எழுப்பினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision