திருச்சி மாவட்டம் துவாக்குடி அரசு கலைக்கல்லூரியில் போதை தவிர் வாழ்வில் மிளிர்தலைப்பில் போதை பொருள் விழிப்புணர்வு

திருச்சி மாவட்டம் துவாக்குடி அரசு கலைக்கல்லூரியில் போதை தவிர் வாழ்வில் மிளிர்தலைப்பில் போதை பொருள் விழிப்புணர்வு

திருச்சி மாவட்டம் துவாகுடி அரசு கலைக்கல்லூரியில் *போதை தவிர் வாழ்வில் மிளிர்* தலைப்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் ஆனந்தவல்லி தலைமையில் 15.03.25 நடைபெற்றது.

 சிறப்பு விருந்தினர்களாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயசீலன் மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு ஆகியோர் கஞ்சாவினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளான நினைவாற்றல் இழப்பு, இரத்த அழுத்தம் தன்னிச்சையான சிரிப்பு கவனக் குறைபாடு நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோய் ஆபத்துகள் மதுவால் ஏற்படும் பாதிப்புகளான புற்றுநோய் தூக்கமின்மை வயிறு எரிச்சல் இரத்த வாந்தி கணைய பாதிப்பு மாரடைப்பு அபாயம் மூளை நரம்பியல்

 கோளாறு சிறு மூளை பாதிப்பு குறித்தும் போதை ஊசி செலுத்துவதினால் ஏற்படும் பிரச்சனைகளான கல்லீரல் பாதிப்பு இரத்த நாள பாதிப்பு மனநல பாதிப்பு குறித்தும் புகையிலைப் பொருகளினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் போதைப் பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் உளவியல் சார்ந்த பிரச்சினைகளான மனசோர்வு ஆளுமையில் மாற்றங்கள் தற்கொலை எண்ணம் மன சிதைவு நரம்பியல் கோளாறு மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை மூலம் செயல்படும் கலங்கரை ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சேவைகள் நட்புடன் உங்களோடு மனநல சேவையின் கட்டணம் இல்லா தொலைபேசி எண் 14 416, போதைப்பொருள் ஒழிப்பு தொலைபேசி எண் 10581 குறித்தும் போதைப் பொருளினால் ஏற்படும் பாதிப்புகள் பிரச்சனைகள் சமுதாயத்தில் ஏற்படும் குற்றங்கள் குறித்தும்

 போதைப்பொருள் மறுவாழ்வு இல்லங்களான குடி போதை மறுவாழ்வு மையங்கள் மற்றும் போதைப்பொருள் மறுவாழ்வு மையங்கள் செயல்பாடுகள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கினார்கள். போதைப் பொருள் தடுப்பு குழு தலைவர் பேராசிரியர் முனைவர் அப்துல் சலாம் நோக்கயுரையாற்றினார். மின்னணுவியல் துறை தலைவர் காளிதாஸ் வரவேற்புரை ஆற்றினார் இயற்பியல் துறை தலைவர் அறிவழகன் நன்றி கூறினார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மின்னணுவியல் துறை உதவி பேராசிரியர் துர்கா தேவி இயற்பியல் துறை உதவி பேராசிரியர் கனகவள்ளி ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பெற்றனர் போதைப் பொருள் புகார் குறித்த போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு (Drug free Tamilnadu )செயலி குறித்தும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision