திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு தயாராகும் வாடிவாசல்

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு தயாராகும் வாடிவாசல்

திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு சூரியூரில் வருகிற( தை இரண்டு) 16.01.2023 திங்கள்கிழமை நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் தேதி கோவில் திருவிழா முன்னிட்டு  சூரியூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர். 400 மீட்டர் தூரத்திற்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டு களத்திற்குள் 15 மீட்டர் வரை தேங்காய் நார்கள் கொட்டப்பட உள்ளது.  ஆயிரக்கணக்கானோர் ஜல்லிக்கட்டு காண வருவதால் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தற்பொழுது ஜல்லிக்கட்டு களத்தில் வாடிவாசல் பகுதி காளைகளை பரிசோதனை செய்யும்  பகுதி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. களத்திற்குள் உள்ள இரும்பு தடுப்பு வேலைகளுக்கும் வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகள் பகுதி முழுவதும் இரும்பு தடுப்புகளை கொண்டு பாதுகாப்பாக அமைத்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால், இப்பகுதி கிராம மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு  போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தங்க மோதிரம் இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்க  விழா குழுவினர் செய்துள்ளனர். 500 காளைகளும், 300 காளையர்களும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn