திருச்சி காவிரி ஆற்றில் இன்று (19.10.2022) நீர்வரத்து நிலவரம்

திருச்சி காவிரி ஆற்றில் இன்று (19.10.2022) நீர்வரத்து நிலவரம்

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடகா அணைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. அங்கிருந்து உபரி நீரானது திறக்கப்பட்டு வருகிறது. இந்த நீர் மேட்டூர் அணையில் முழுவதும் நிரம்பியதை அடுத்து உபரி நீர் காவிரி ஆற்றல் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் நேற்று (18.10.2022) திருச்சி முக்கொம்பு மேலணைக்கு 2 லட்சத்து 13 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று (19.10.2022) காலை நிலவரப்படி 1 லட்சத்து 87 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

இதில் முக்கொம்பு காவிரி கதவணையிலிருந்து 49 ஆயிரம் 500 கன அடி நீரும், கொள்ளிடம் கதவணையில் இருந்து ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 500 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் காவேரி கரையோர மக்கள் ஆற்றில் இறங்குவோம் குளிக்கவோ துணி துவைக்கவோ கூடாது என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

குறிப்பாக ஆற்றின் கரையோரங்களில் செல்பி எடுக்கவோ, வேடிக்கை பார்க்க செல்லக்கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO