குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த பயிற்சி

குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த பயிற்சி

திருச்சி தென்னக இரயில்வே மண்டல பல்துறை பயிற்சி நிறுவனத்தில் குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த பயிற்சி முதல்வர் பிரேம்குமார் தலைமையில் நடைப்பெற்றது. மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு குழந்தைகளின் நான்கு வகையான உரிமைகள், குழந்தைகள் மீதான வன்முறைகள் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும் குழந்தை திருமண தடைச் சட்டம் 2006, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் 1986, குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 மற்றும் இளஞ்சிறார் நீதி சட்டம் 2015 குறித்தும் மாற்றுக் குடும்ப பராமரிப்பு முறை திட்டங்கள் குழந்தை பாதுகாப்பு குழு செயல்பாடுகள் மற்றும் பொறுப்புகள் குறித்தும் குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098 பெண்களுக்கான இலவச தொலைபேசி எண் 181,

மூத்த குடிமக்களுக்கான இலவச தொலைபேசி எண் 14567 சைபர் க்ரைம் தொலைபேசி எண் 1930 போதைப்பொருள் குறித்த தொலைபேசி எண் 10581 குறித்து பயிற்சி வழங்கினார். பயிற்சியில் இரயில்வே பணியாளர்கள் 100க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision