ஒப்பந்த மருத்துவ ஊழியர்களுக்கு இரண்டு மாத காலமாய் ஊதியம் வழங்காத திருச்சி மாநகராட்சி நிர்வாகம்

ஒப்பந்த மருத்துவ ஊழியர்களுக்கு இரண்டு மாத காலமாய் ஊதியம் வழங்காத திருச்சி மாநகராட்சி நிர்வாகம்

கொரோனா இரண்டாவது அலை அதிகரித்த போது மக்களுக்கு உதவும் வகையில்  மாநகராட்சி சார்பில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட 21 மருத்துவ ஊழியர்களுக்கு இரண்டு மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். ஊதியம் வழங்குவதில் நிர்வாகத்தினரிடம் வெளிப்படைத் தன்மை இல்லை. கடந்த மாதத்தில் கூட இவர்கள் சம்பளத்தில் பாதி ஊதியமே என்கின்றனர் ஊழியர்கள்.

கொரோனா தொற்று அதிகரித்த போது ஏப்ரல் மாத மத்தியில் 12 செவிலியர்கள் மற்றும் 9 ஆய்வக தொழில்நுட்ப ஊழியர்கள் ஊரக பகுதிகளில் 18 ஆரம்ப சுகாதார நிலையங்களில் RT- PCR சோதனை மாதிரிகளை சேகரிப்பதற்காக பணியமர்த்தப்பட்டனர். ஒப்பந்த செவிலியர் ஒருவர் கூறுகையில், செவிலியர்கள் எங்களுடைய பணிகளை முழுமையாக செய்தோம். ஏப்ரல் மே மாதம் வரை எங்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த ஜூன் மாதம் மற்றும் பாதி ஜூலை மாதத்திற்கான   ஊதியம் வழங்கப்படவில்லை.

எங்களுக்கான ஒப்பந்தம் ஜூன் மாதம் முடிவடைந்த நிலையில் தடுப்பூசி போடும் பணிக்காக ஜூலை 19இல் மீண்டும் பணியில் ஈடுபட்டோம். மக்களை காப்பதற்காக தொடர்ந்து பணிபுரிந்து வரும் எங்களால் எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவுவதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம் என்றார். மற்றொரு செவிலியர் இதுகுறித்துக் கூறுகையில்... நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

ஆனால் எங்களுக்கு பேசப்பட்ட ரூ.14,000 மாத ஊதியத்தில் 9500 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது என்றார். சுகாதார ஊழியர்களின் சம்பள பின்னடைவு குறித்து மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இது குறித்து மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான்  கூறுகையில்... இப்பிரச்சனை குறித்து இதுவரை எங்கள் கவனத்திற்கு வரவில்லை. இனி இதுபோன்று நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை வேகமாக எடுக்கப்படும். அவர்களுக்கு ஊதியம் கிடைக்க  உடனடியாக ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn