ஃபெஞ்சல் புயலால் பாதித்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய திருச்சி ஜல்லிக்கட்டு அமைப்பினர்.
ஃபெஞ்சல் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக விழுப்புரம் மாவட்டம் அரசூர், இருவேல்பட்டு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு திருச்சியை சேர்ந்த ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்பு கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் 500 லிட்டர் பால், 500 சர்க்கரை பாக்கெட்டுகள், 500 பிரட் பாக்கெட்டுகள் மற்றும் 500 பிஸ்கட் பாக்கெட்டுகள் உள்ளிட்டவை நிவாரண உதவிகளாக வழங்கினர்.
ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்ட போது விழுப்புரம் மாவட்ட மக்கள் பாகுபாடின்றி தங்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தற்சமயம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் தங்களால் இயன்ற இந்த உதவியை செய்துள்ளதாக ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்பு கழகத்தினர் தெரிவித்தனர்.
ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்பு கழகம் மாநில தலைவர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision