திருச்சி ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயாவின் மாநில அளவிலான தமிழ் மற்றும் ஆங்கிலப் பேச்சுப்போட்டி
திருச்சி கூத்தூர் ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா பள்ளியில் மாநில அளவில் தமிழ் மற்றும் ஆங்கில பேச்சுப்போட்டி வரும் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும். இப்போட்டியில் சி.பி.எஸ்.இ./ஐ.சி.எஸ்.இ./ மெட்ரிக் மற்றும் அரசு பள்ளிகள் என தமிழ்நாட்டைச் சேர்ந்த 60 பள்ளிகள் இதில் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போட்டிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஜீனியர் பிரிவிலும், 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் சீனியர் பிரிவிலும் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிகழ்வில் 480க்கும் மேற்பட்ட மாணவர்கள் 120க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொள்ளக் கூடிய அளவில் இது ஒரு பேச்சுத்திருவிழாவாக நடைபெற உள்ளது.
இப்போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களிலிருந்து வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்க திருச்சியில் உள்ள பல்வேறு கல்லூரிகளிலிருந்து பேராசிரியர்கள் மற்றும் முனைவர்கள் வருகைத்தர உள்ளனர். இப்போட்டி நடைபெற பள்ளி வளாகத்தில் நான்கு அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.
இப்போட்டிகள் டிசம்பர் 13 அன்று முதல் சுற்று போட்டியும், டிசம்பர் 14 அன்று காலை அரையிறுதிப் போட்டியும், மதியம் இறுதிப் போட்டியான கிராண்ட் ஃபினாலேயும் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் முறையே முதல் பரிசாக ரூபாய்.10,000/- இரண்டாவது பரிசாக ரூ.8000/-, மூன்றாவது பரிசாக ரூ.6,000/- நான்காவது பரிசாக ரூ.4,000/- மற்றும் ஐந்தாவது பரிசாக ரூ.2,000/- ஆக மொத்தம் 1,20,000/- ரொக்கப்பரிசாக வழங்கப்படும் என ஸ்ரீ விக்னேஷ் கல்விக் குழுமத் தலைவர் கோபிநாதன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் இறுதியாக நடைபெறும் கிராண்ட் ஃபினாலேயானது டிசம்பர் 14 பிற்பகல் 02மணியளவில் பள்ளி ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியானது உள்ளுர் தொலைக்காட்சி சேனல் மற்றும் யூடியூப் தளத்திலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இவ்விழாவில் திருச்சி காவல்துறை முன்னாள் எஸ்.பி.கலியமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார்.
இப்போட்டிகளில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள் கீழ்க்கண்ட அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் : 9843058077 / 8973011177.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision