திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை தொழிலாளர்கள் காந்தி,பாரதி,பகத்சிங் வேடமிட்டு குழந்தைகளுடன் போராட்டம் - அக்டோபர் 15 முதல் வேலைநிறுத்தம்?
நாட்டின் நான்காவது படை பிரிவாக விளங்கும் படைக்கலன் தொழிற்சாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கான முன்னறிவிப்பு எச்சரிக்கை போராட்டம் நடத்தினர். தனியார் மயமாக்குவதை கண்டித்து திருச்சி படைக்கலன் தொழிற்சாலை முன்பாக அனைத்து தொழிற்சங்க தொழிலாளர்கள் தனிமனித இடைவெளியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது தொழிலாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியுனர். நூற்றுக்கணக்கானோர் தொழிற்சாலை வாயிலில் நின்று தனி மனித இடைவெளியில் நின்று போராட்டம் நடத்தி விட்டு பணிக்கு சென்றனர்.
மத்திய அரசு தங்களுடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவிடில் திட்டமிட்டபடி இந்தியாவில் உள்ள 41 படைக்கலன் தொழிற்சாலைகளும் வருகிற அக்டோபர் 12 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் என தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் மூன்று குழந்தைகள் காந்தி,பாரதி,பகத்சிங் வேடமிட்டு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.