முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து வரும் 28-ம் தேதி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது ராயபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகரை அ.தி.மு.க.வினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் அரைநிர்வாணப்படுத்தி தாக்கினர்.
இதற்கிடையே, தி.மு.க. பிரமுகரை தாக்கியது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின் போலீசார் ஜெயக்குமாரை கைது செய்து வரும் மார்ச் 7-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.கழக செயலாளர்வெல்லமண்டி.ந. நடராஜன், முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் வரும் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஆளும் திமுகவின் கையாளாகாத் தனத்தையும், திமுக அமைச்சர்களின் அராஜகத்தையும், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசின் செயல்பாடுகளையும் மக்களுக்கு தெளிவாக புரிகின்ற வகையில் விளக்கிக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்திருப்பதைக் கண்டிக்கிறோம்.
நம் நெஞ்சங்களில் வாழும் இதயதெய்வம் மறைந்த தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா காட்டிய வழியில் கழக ஒருங்கிணைப்பாளர், முன்னாள் தமிழக முதல்வர். மாண்புமிகு எதிர்கட்சி துணை தலைவர் அண்ணன் O.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் தமிழக முதல்வர், மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி K.பழனிச்சாமி ஆணைக்கிணங்க, திருச்சி மண்டல பொறுப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளருமான .R.வைத்திலிங்கம்,M.L.A. வழிகாட்டுதளின்படி
28-02-2022 திங்கள் கிழமை காலை 10.00 மணி அளவில் வருகின்ற மேலசிந்தாமணி பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவ சிலை அருகில் திருச்சி ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர். .D.ஜெயக்குமாரை கைது செய்த திமுக-அரசின் பழிவாங்கும் நடவடிக்கையைக் கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
அதுசமயம் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட கழக, பகுதி கழக. வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், எம்.ஜி.ஆர். மன்றம், மாண்புமிகு அம்மா பேரவை எம்.ஜி.ஆர். இளைஞர் அணி. மகளிர் அணி, மாணவர் தொழிற்சங்க பேரவை, வழக்கறிஞர் பிரிவு. சிறுபான்மையினர் அணி, கழக அண்ணா நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, இலக்கிய அணி, மருத்துவ அணி, கழக செயற்குழு. பொதுக்குழு உறுப்பினர்கள், Ex.கோட்டத் தலைவர்கள், Ex.உள்ளாட்சி தலைவர்கள். பிரதிநிதிகள், கூட்டுறவு இயக்குநர்கள், முன்னாள் தலைமை கழக சங்க தலைவர்கள், பேச்சாளர்கள், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவினை சேர்ந்தவர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn