உக்கடை அரியமங்கலம் பகுதியில் ரயில்வே தடத்தை கடக்க சுரங்கப்பாதை - எம்.பி ஆய்வு

உக்கடை அரியமங்கலம் பகுதியில் ரயில்வே தடத்தை கடக்க சுரங்கப்பாதை - எம்.பி ஆய்வு

உக்கடை அரியமங்கலம் பகுதியில் உள்ள திருச்சி - சென்னை இரயில்வே தடத்தை பொதுமக்கள் எளிதாக கடந்து செல்லும் வண்ணம் சுரங்கப்பாதை அமைக்க வேண்டி கோரிக்கை விடுத்தும், அப்பகுதியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கலந்துரையாடினேன்.

அவர்களின் அனைத்து எண்ணங்களையும் தென்னக இரயில்வே திருச்சி கோட்ட மேலாலரை சந்தித்து சுமார் 15,000 மக்கள் வாழும் அரியமங்கலத்தை இரண்டாகப் பிரிக்கும் திருச்சி-சென்னை இரயில்வே தடத்தைக் (Railway track) கடக்கும்போது பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளைத் தடுக்க, தென்னக இரயில்வே அப்பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. 

ஆனால், இது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமே தவிர, இரயில்வே தடத்தின் இருபுறமும் வாழும் மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தையும், உணர்வுபூர்வமான வழிபாட்டுத் தேவைகளையும் பாதிக்கும்.இரயில்வே தடத்தைக் கடப்பதற்காக மக்கள் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். 

இதனால் ஏற்படும் சிரமங்களைத் தெரிந்துகொள்ளவும், மக்களின் கருத்துகளைக் கேட்டறியவும், இன்று (15.04.2025) காலை அரியமங்கலத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுடன் கலந்துரையாடினேன். அப்போது நான் பேசுகையில்,பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், ரேஷன் கடைகளுக்குச் செல்பவர்கள், கபர்ஸ்தானுக்கு உடல்களை எடுத்துச் செல்பவர்கள் உள்ளிட்ட முக்கியத் தேவைகளுக்காக இரயில்வே தடத்தைக் கடக்க வேண்டியுள்ளது. 

அதற்கான, உங்கள் 15 ஆண்டு கால கோரிக்கையான சுரங்கப்பாதையை அமைக்க, யாருக்கும் பாதிப்பு இல்லாமல், தேவையான அளவு நிலத்தை மட்டும் கையகப்படுத்தி, விரைவில் இதை நிறைவேற்ற வேண்டும்.சுரங்கப்பாதை பணிகள் தொடங்கும்போது, தற்காலிகமாக ஒரு சிறு தடுப்புச்சுவர் ஏற்படுத்தப்படும். ஆனால், ஊர்ப் பெரியவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட

அனைவரும் கலந்தாலோசித்து, பணிகளைத் தொடங்குவதற்கு ஒப்புதல் அளிக்கும் வரை எந்தத் தடுப்புச் சுவரும் அமைக்கப்படாது என உறுதியளிக்கிறேன்.கடந்த 15 ஆண்டுகளாக நிறைவேறாத உங்கள் இந்தக் கோரிக்கையை, தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் நீங்கள் என்னிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தீர்கள். இரயில்வே தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் உள்ள நிலையில், முக்கியமான நான்கு கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, திருச்சி கோட்ட இரயில்வே மேலாளருக்கு கோரிக்கைக் கடிதம் அளித்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். அவற்றில் இந்த சுரங்கப்பாதையும் ஒன்று.

திருச்சி கோட்ட இரயில்வே மேலாளர் (DRM) மிகவும் நல்ல மனிதர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவரிடம் நான் எடுத்துரைத்த காரணங்களை ஏற்று, இதற்கு தீர்வு காண வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் அவர் இப்பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு சென்றுள்ளார்.அவரின் வேண்டுகோள் என்னவென்றால், இந்தப் பகுதி மக்களாகிய உங்கள் அனைவரின் முழு ஒத்துழைப்பு தேவை. பொது நன்மைக்காகச் செய்யப்படும் இப்பணியில் சிறு இடையூறுகள் ஏற்படலாம். சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கும்போது, தற்காலிகமாக மேம்பாலம் அமைக்கப்படலாம். ஆனால், அது நிரந்தரப் பாலமாக மாறிவிடுமோ, சுரங்கப்பாதைப் பணிகள் கைவிடப்படுமோ என்று நீங்கள் அச்சப்படத் தேவையில்லை. இதற்கான உத்தரவாதத்தை நான் DRM அவர்களிடம் பெறுவேன்.

நிரந்தரத் தீர்வுக்காக எந்தத் தடைகள் வந்தாலும், நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து, இந்த சுரங்கப்பாதை அமைய ஒத்துழைக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும், என் சார்பில் ஓய்வு பெற்ற இரண்டு இரயில்வே அதிகாரிகள் உங்களுடன் இணைந்து செயல்படுவார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.இறைவனின் அருளாலும், உங்கள் ஒத்துழைப்பாலும் இந்தப் பணிகள் சிறப்பாக நிறைவேறி, சுரங்கப்பாதை அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று உரையாற்றினேன். 

அப்பகுதி மக்கள் அனைவரும் எனக்கு நன்றி தெரிவித்தனர். இது தொடர்பாக, இன்று மீண்டும் திருச்சி கோட்ட இரயில்வே மேலாளரை நேரில் சந்தித்தேன்.இன்றைய ஆய்வின் விவரங்களையும், அப்பகுதி மக்களின் அச்சங்களையும், எதிர்பார்ப்புகளையும் எடுத்துரைத்து, உக்கடை அரியமங்கலம் பகுதி மக்களுக்கும், திருச்சி தென்னக இரயில்வே துறைக்கும் பாலமாகச் செயல்படுவேன் என்று உறுதியளித்தேன்.தென்னக இரயில்வே திருச்சி கோட்ட மேலாளரும், மக்களின் ஒப்புதல் பெறப்பட்டு, நிலம் கையகப்படுத்தப்படும் வரை தடுப்புச் சுவர் அமைக்கப்படாது என்றும், ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் உறுதியளித்தார். 

அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, நம்பிக்கையுடன் புறப்பட்டேன்.இந்தச் சந்திப்பின்போது, திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மாநகரக் கழகச் செயலாளரும், மண்டலக் குழுத் தலைவருமான திரு. மு. மதிவானன் எம்.சி. அவர்களும் உடனிருந்தார்.காலை ஆய்வின் போது, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, மாவட்ட துணை செயலாளர்கள் அப்பீஸ் முத்துக்குமார், துரை வடிவேல், எல்லக்குடி அன்புராஜ், தலைவர் வைகோ அவர்களின் உதவியாளர் வெ.அடைக்கலம், பகுதி செயலாளர்கள் காட்டூர் ஜெயச்சந்திரன், புத்தூர் கோபாலகிருஷ்ணன், ஜங்ஷன் எஸ். பி. செல்லத்துரை, பொன்மலை எப்.எஸ்.ஜெயசீலன், ஏர்போர்ட் வினோத், உறையூர் ஆசிரியர் முருகன், ரயில்வே செழியன், பொதுக்குழு உறுப்பினர் அச்சகம் செல்வராஜ், வட்ட செயலாளர்கள் சரவணன்,எல். ஐ. சி. செந்தில், இணையதள அணி ஸ்டீபன் சுரேஷ், அம்பிகாபதி அடைக்கலம், ரமேஷ் அடைக்கலம் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர். என்று துரை வைகோ அவர்கள் கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision