தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை

தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை

இன்று திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவர் சேர்க்கையில் பெற்றோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்த்தனர்.

திருச்சி நகர சரக வட்டார கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணி அவர்கள் பெற்றோர்களிடம் இருந்து சேர்க்கை விண்ணப்பங்களை பெற்று மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். மேலும் முதல் வகுப்பில் சேரும் மாணவர்களை பள்ளியில் பயிலும் மற்ற மாணவர்கள் மலர் தூவி வரவேற்றனர்.

புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு புத்தகப்பை, எழுது பொருள்கள், நோட்டு, குடிநீர் பாட்டில்கள் ஆகியவை வழங்கப்பட்டன. பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் அனைவரையும் வரவேற்றார். ஆசிரியை சரண்யா நன்றி கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision