திருச்சி மாநகரில் இரண்டு தற்காலிக பேருந்து நிலையங்கள் இன்று முதல் செயல்படும்

திருச்சி மாநகரில் இரண்டு தற்காலிக பேருந்து நிலையங்கள் இன்று முதல் செயல்படும்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு திருச்சி மன்னார்புரம் அணுகு சாலையில் தற்காலிக பேருந்து நிலையத்தை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி துவக்கி வைத்தார்.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு திருச்சி மாநகரில் இன்று 28ஆம் தேதி முதல் வருகிற (04.11.2024) நான்காம் தேதி வரை தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்பட உள்ளது.

தற்காலிக பேருந்து நிலையத்தில் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் சோனா மீனா திரையரங்கு எதிரே தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

புதுக்கோட்டை மதுரை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மன்னார்புரம் அணுகு சாலை மற்றும் இலுப்பூர் சாலையில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இன்று முதல் இயக்கப்படும்.

தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மார்க்கத்திலிருந்து திருச்சி மாநகர் வழியாக சென்னை செல்லும் அரசு பேருந்துகள் மன்னார்புரம் வந்து பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு மன்னார்புரத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை செல்லும் என மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.

வழக்கம்போல் மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்கள் இயங்கும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மன்னார்புரத்திற்கு புறநகர் பேருந்துகள் இயக்கப்படும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision