திருச்சி மாநகராட்சியில் இன்று (03.02.2022) விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சியினர் தயாராகி உள்ளனர்.
இந்நிலையில் திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் குறிப்பிட்ட வார்டுகளில் மட்டும் போட்டியிடுவதற்கு விஜய் மக்கள் இயக்கம் முடிவு செய்துள்ளது.
அதன்படி வார்டு எண் (36) - K.அருள்ராஜ், வார்டு நம்பர் (40) - E.ஜோசப் ராஜ், வார்டு (31) - தேவகி, வார்டு (61) - வி.பஞ்சவர்ணம், வார்டு (18) - க.ஷப்னா பானு கமுருதீன், வார்டு (64) - வி.சௌந்தர்யா வெள்ளைச்சாமி, வார்டு (49) - ச.சித்ரா ஆகியோர் முதற்கட்டமாக இன்று 7 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn