அனைத்து கழிவுகளையும், அழிக்க, அகற்றக்கூடிய தொழில்நுட்பம் நமது வசம் உள்ளது. ஆனால் நாம் முறையாக பயன்படுத்துவது இல்லை - மயில்சாமி அண்ணாதுரை பேட்டி
திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயின்று PG TRB தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பணி ஏற்க இருக்கும் 85 ஆசிரியர்கள் மற்றும் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மற்றும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 1952ம் ஆம் ஆண்டு நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்டோர் கால் பதித்தது உண்மை. இதன்மூலம் நிலவுக்கு விண்வெளிக்கு மனிதர்கள் சென்று வர முடியும் என்பது நிரூபிக்கப்பட்டது. தற்போதைய நவீன தொழில்நுட்ப காலத்தில் விண்வெளியில் பல மாதங்கள் தங்கி இருப்பதை பார்க்கலாம். அதுபோல, நிலவிலும் குடியேறும் காலம் விரைவில் வரும்.
மனித கழிவுகளை மனிதனே அகற்றும் முறை தடுத்து அதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் வலியுறுத்துகிறது என்ற கேள்விக்கு ?... கண்டிப்பாக அதற்கான தொழில் நுட்பங்கள் இருக்கிறது. ஆனால் அதைத் தாண்டி மனிதன் அதை செய்கிறான் என்றால் அது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. தொழில்நுட்பம் இருந்தும் மனிதன் அதை செய்கிறான் என்றால் அது தவறான காரியம்தான்.
நாட்டு மக்கள் எல்லாவற்றையும் இன்று தெரிந்து கொள்கிறார்கள் தொலைக்காட்சியின் வாயிலாக என்றால் அதற்கு காரணம் செயற்கைக்கோள் அதற்கு காரணம் அறிவியல் வளர்ச்சி. உலகில் தானியங்கி வங்கிகள் அதிகம் செயல்படும் நாடு இந்தியா.
உலகில் அதிகமான எதிரிகள் சுற்றி உள்ள நாடு இந்தியா எனவே அவர்களை கண்காணிக்கவும் செயற்கைக்கோள் தான் பயன்படுகிறது என தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO