திருச்சி வாத்தலை அருகே வெல்டிங் பட்டறை - விநாயகர் கோவிலில் இரும்பு பொருட்கள் திருட்டு

திருச்சி வாத்தலை அருகே வெல்டிங் பட்டறை - விநாயகர் கோவிலில் இரும்பு பொருட்கள் திருட்டுபுகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் என புகார்தாரர் குற்றச்சாட்டு
சிறுகாம்பூர் பகுதியை சேர்ந்த ரத்தினம் மகன் செந்தில் (46). இவர் இழமாண்டி அம்மன் கோவில் தெருவில் சொந்தமாக வெல்டிங் பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் வேலை முடிந்ததும் செந்தில் தனது பட்டறையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலை திரும்பி வந்து பார்த்தபோது பட்டறை
கதவின் பூட்டை உடைத்து இருநூற்றி ஐம்பது கிலோ இரும்பு பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செந்தில் வாத்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்தை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது அருகில் இருந்த விநாயகர் கோவிலின் இரும்பு கேட்டுகளும் திருடு போனது தெரியவந்தது. இருப்பினும்
இந்த புகார் தொடர்பாக போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வந்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த புகார்தாரர் செந்தில் திருடுபோன தன் பொருள் குறித்து அருகில் உள்ள கிராமத்தில் பழைய இரும்பு கடைகளில் விசாரித்துள்ளார். அப்போது திருப்பைஞ்சீலி பகுதியில் உள்ள பழைய இரும்பு கடையில் சிறுகாம்பூரை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கடைக்காரரிடம் இரும்பு பொருட்களை எடைக்கு விற்றது
தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக செந்தில் வாத்தலை போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்காமல் போலீசார் அலட்சியம் காட்டி வருவதாக புகார்தாரர் வேதனை தெரிவித்து வருகிறார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision