அரசியலில் யார் தான் புனிதர் - அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் கேள்வி
தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி தெற்கு மாவட்டம் பொன்மலை பகுதியில் திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பகுதி திமுக பொருளாளர் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி ஆர் பாலு கழக முதன்மைச் செயலாளர் நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என் நேரு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
அப்போது பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே .என்.நேரு பேச்சு .....
ஓர் ஆண்டில் நேரு 100 கோடி ரூபாய் சம்பாதித்ததாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள். நான் அவ்வாறு சம்பாதிக்கவில்லை, அப்படி சம்பாதித்தால் அது மக்களுக்காக தான் செலவழிக்கப்படும்.
கே.என்.நேரு புனிதரா என கேட்கிறார்கள்.
அரசியலில் யார் தான் புனிதரா இருக்கிறார்கள். என்னை நீதிமன்றத்தில் சந்திக்கிறோம் என்கிறார்கள் ஏற்கனவே என் மீது 19 வழக்குகள் பதியப்பட்டது. அதிலிருந்து வெளியே வந்துள்ளோம்.
தி.மு.க அரசு பொறுப்பேற்றபோது 5 லட்சம் கோடி ரூபாய் கடனாக இருந்தது. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நான்கு மாதங்கள் கொரோனா, அதன் பின்பு வெள்ளம், அதன் பின்பு சட்டமன்ற கூட்டத்தொடர் இருந்தது மீதமிருந்த சில மாதங்களில் தான் பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.திருச்சி மாவட்டத்தில் மட்டும் 850 கோடியில் புதிய பேருந்து முனையம், மார்கெட்
120 கோடி ரூபாயில் கூட்டு குடிநீர் திட்டம், தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெறுகிறது. இது போன்ற எண்ணற்ற பணிகளை செய்து வருகிறோம்.
திருச்சி மாவட்டம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி பெறும். சென்னைக்கு அடுத்தப்படியாக திருச்சி என்கிற நிலைக்கு மாவட்டத்தை உயர்த்துவோம்.நாங்கள் நிச்சயம் நேர்மையாக தான் பணியாற்றுவோம், எந்த தவறும் செய்ய மாட்டோம் என உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.co/nepIqeLanO