திருச்சியின் முதல் உள்ளடக்க பொதுப்பூங்காவுக்கான பணிகள் தொடக்கம்

திருச்சியின் முதல் உள்ளடக்க பொதுப்பூங்காவுக்கான பணிகள் தொடக்கம்

திருச்சி காஜாமலை பகுதியில், 7.5 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டுள்ள இப்பூங்காவுக்கான கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள நடைபாதை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் இந்த மாதிரிப் பூங்கா உருவாக்கப்படும். 

இந்த உள்ளடக்கப் பூங்காவில் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை, யோகா மையம் போன்றவற்றுடன், திறந்தவெளி அரங்கம், உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கண்களைக் கவரும் கலைநுட்பச் சிற்பங்கள், மலர்ச்செடிகள், ஓய்விருக்கைகளுடன் அமையவுள்ள இப்பூங்காவுக்கான பணிகள் ஆறுமாத காலத்தில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பூங்காவுக்கான பொதுமக்களின் வரவேற்பைப் பொறுத்து இதுபோன்ற மேலும் பல பூங்காக்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision